டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம்; எஸ்பிஐ யோனோ (SBI YONO APP) வழங்கும் இந்த வசதியை பயன்படுத்துவது எவ்வாறு?
நம்மில் சிலர் ஏடிஎம்க்கு பணம் எடுக்க சென்று, ஏடிஎம் அறைக்குள் நுழைந்தவுடன் தான் ஏடிஎம் கார்டை வீட்டிலே மறந்து வைத்துவிட்டு வந்ததை நினைப்பார்கள். இதனால் பணம் எடுக்க முடியாமல் சிரமங்களை சந்தித்தனர். கவலை வேண்டாம், இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அதன் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை வழங்குகிறது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி, ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க டெபிட் கார்டு கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை.
இந்த டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் இருந்து வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்கக்கூடிய புதிய வங்கி வசதியை எஸ்பிஐ சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏடிஎம்/டெபிட் கார்டு இல்லாமல் இயந்திரத்திலிருந்து பணத்தை எடுக்க வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ யோனோ வைப் பயன்படுத்தலாம்.
இதன் மூலம் எந்த எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்தும் பணம் எடுக்கலாம். மேலும், பிஓஎஸ் டெர்மினல்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் (சிஎஸ்பி) ஆகியவற்றிலும் எஸ்பிஐ யோனோ ஆப் சிறப்பாகச் செயல்படுகிறது.
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் யோனோ செயலியைப் பயன்படுத்தி எஸ்பிஐ ஏடிஎம் களில் இருந்து குறைந்தபட்சம் ரூ 500 முதல் அதிகபட்சம் ரூ 10,000 வரை பணம் எடுக்கலாம்.
எஸ்பிஐ யோனோ ஆப் மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பது எப்படி?
படி 1: உங்கள் மொபைலில் யோனோ செயலியை பதவிறக்கம் செய்து, அதில் உள்நுழையவும்.
படி 2: முகப்புப் பக்கத்தில் உள்ள யோனோ கேஸ் என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: யோனோ கேஸ் இன் கீழ் ஏடிஎம் பிரிவில் கிளிக் செய்யவும்.
படி 4: தேவையான தொகையை பதிவிட்டு உள்ளிடவும்.
படி 5: அடுத்ததாக 6 இலக்க பின்னை உருவாக்கவும்.
படி 6: நீங்கள் பின்னை உருவாக்கியதும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு யோனோ பணப் பரிவர்த்தனை எண் வரும். இந்த எண்ணை 6 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.
படி 7: இப்போது ஏடிஎம்மில் உள்ள யோனோ கேஷ் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 8: பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட யோனோ பணப் பரிவர்த்தனை எண்ணையும் நீங்கள் உருவாக்கிய 6 இலக்க பின்னையும் உள்ளிடவும்.
படி 9: இந்த செயல்முறை முடிந்ததும், நீங்கள் இப்போது ஏடிஎம்மில் இருந்து பணத்தைப் பெறலாம்.
You can now withdraw money at ATMs without a debit card – SBI YONO APP !!!
You can withdraw money at an ATM without a debit card; How to use this feature provided by SBI Yono?
Some of us go to the ATM to withdraw money and only when we enter the ATM room do we forget that we forgot the ATM card at home. Thus they faced difficulties in being able to withdraw money. Don’t worry, you can no longer withdraw money without an ATM card.
State Bank of India (SBI), India’s largest public sector bank, offers this facility to its customers. SBI customers no longer have to carry a debit card to withdraw money from an ATM.
SBI has recently introduced a new banking facility where customers can withdraw money from ATMs without this debit card. Customers can use SBI Yono Vibe to withdraw money from the machine without an ATM / debit card.
This allows you to withdraw money from any SBI ATM. In addition, the SBI Yono app also specializes in POS terminals and customer service centers (CSPs).
SBI Bank customers can withdraw a minimum of Rs 500 to a maximum of Rs 10,000 from SBI ATMs using the Yono processor.
How to withdraw money at ATM through SBI Yono App?
Step 1: Download Yono Processor on your mobile and sign in.
Step 2: Click on Yono Case on the home page.
Step 3: Click on the ATM section under Yono Case.
Step 4: Enter the required amount and enter.
Step 5: Next create a 6 digit pin.
Step 6: Once you have created the PIN, the Yono money transfer number will be sent to your registered mobile number. This number should be used within 6 hours.
Step 7: Now select the Yono Cash option in the ATM.
Step 8: Enter the Yono money transfer number sent to the registered mobile number and the 6 digit PIN you created.
Step 9: Once this process is complete, you can now withdraw money from the ATM.