அடல் பென்ஷன் யோஜனோ – Atal Pension Yojana (APY) – சந்தாதாரர் தகவல் கையேடு
- இந்திய அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. 1000, ரூ 2000, ரூ 3000, ரூ 4000 மற்றும் ரூ.5000 அளவுகளில் 60 வயதுக்குப் பிறகு APY வழங்குகிறது.
- சந்தாதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். APY இல் சேர சந்தாதாரரின் வயது 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.
- சந்தாதாரர் APY இல் ஒரு வங்கி கிளை / தபால் அலுவலகம் மூலம் (கிடைக்கும் ஆன்லைன் / ஆஃப்லைன் முறைகளின் வழியாக) சேரலாம்.
- APY கணக்கில் நியமனதாரர் மற்றும் வாழ்க்கைத் துணையின் விவரங்களை வழங்குவது கட்டாயமாகும்.
- சேமிப்பு வங்கி கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் வசதி மூலம் மாதாந்திர அல்லது காலாண்டு அல்லது அரை ஆண்டு அடிப்படையில் கட்டணம் செலுத்தப்படலாம்.
APY இன் கீழ், PRAN, பரிவர்த்தனை அறிக்கைகள் மற்றும் பங்களிப்பு
- www.npscra.nsdl.co.in>>Home>>Atal pension Yojana>>APY e-PRAN/Transaction statement view என்பதற்குச் சென்று, பரிவர்த்தனை அறிக்கை மற்றும் PRAN அட்டையை எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தும், இலவசமாகப் பார்வையிடப்படலாம்.
- https://enps.nsdl.com/eNPS/APYRePrintPRAN.html>>Atal Pension Yojana>>Print APY PRAN Card இணையதளத்தில் தேவையான தொகையை செலுத்திய பின்னர் வன்நகல் PRAN அட்டையை வழங்க சந்தாதாரர் கோரலாம்.
- அடல் பென்ஷன் யோஜனாவில் சேர்ந்த பிறகு, பரிவர்த்தனை அறிக்கையின் வன்நகல் வருடத்திற்கு ஒரு முறை பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பப்படும், அதாவது அடல் பென்ஷன் யோஜனாவுக்கு பதிவுசெய்யும் போது சந்தாதாரர் வழங்கிய முகவரிக்கு அனுப்பப்படும்.
- APY கணக்கு / பங்களிப்பு தொடர்பான அனைத்து கேள்விகளும் APY-SP கிளையில் மட்டுமோ அல்லது CGMS வழியாக மட்டுமோ எழுப்பப்பட வேண்டும்.
- பங்களிப்புகளின் நிலை குறித்த தகவல்கள் CRA-NSDL மூலமாக சந்தாதாரரின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு அவ்வப்போது SMS அலெர்டுகள் மூலம் தெரிவிக்கப்படும்.
APY இன் கீழ் சந்தாதாரர் விவரங்களை மாற்றியமைத்தல்
- APY சந்தாதாரர் மாற்றப் படிவத்தில் விரும்பிய மாற்றங்களை பூர்த்தி செய்து, முகவரி, தொறலவபசி எண் போன்ற தனிப்பட்ட தகவல்களை மாற்றியமைக்க தேவயான
- ஆவணங்களுடன் சந்தாதாரர் APY-SP கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான படிவத்தை ஆன்லைனில் https://www.npscra.nsdl.co.in/nsdl-forms.php இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்
- பங்களிப்பின் காலமுறை மாற்றம் எ.கா. காலாண்டு பங்களிப்பிலிருந்து மாதாந்திர பங்களிப்பு அல்லது காலாண்டு பங்களிப்பிலிருந்து அரை ஆண்டு பங்களிப்பு போன்றவற்றை, APY சந்தாதாரர் எழுத்துபூர்வமான கோரிக்கையை APY-SP கிளைக்கு சமர்ப்பித்த பின்னர் மேற்கொள்ளலாம்.
ஓய்வூதிய தொகையை மேம்படுத்துதல் / குறைத்தல்
- APY சந்தாதாரர்கள் தங்கள் ஓய்வூதியத் தொகையை நிதியாண்டுக்கு ஒரு முறை மேம்படுத்தலாம் / குறைக்கலாம்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உத்தரவாத ஓய்வூதியத் தொகையின் படி டெபாசிட் செய்யப்பட வேண்டிய / திரும்பப் பெற வேண்டிய வேறுபட்ட தொகையைச் சரிபார்க்க இந்த அம்சம் பயனருக்கு உதவுகின்றது.
- மேம்படுத்தப்பட்டால் அதிக அளவு டெபாசிட் செய்யப்பட வேண்டும், குறைக்கப்பட்டால் கூடுதல் பங்களிப்புகள் சந்தாதாரர்களுக்கு திருப்பித் தரப்படும்.
- மாறுதல் வசதி வருடத்திற்கு ஒரு முறை எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும். அதற்கான “APY சந்தாதாரர் மாற்றும் படிவம்” https://www.npscra.nsdl.co.in/ >>Home>>Atal Pension Yojana>>Forms>>Subscriber Maintenance>> Subscriber Modification Form இல் கிடைக்கப்பெறும் மற்றும் அறத APY-SP கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியத் தொகையை
- மேம்படுத்துவது என்பது சந்தாதாரரின் ஓய்வூதியத் தொகையை அதிகரிப்பது மற்றும் ஓய்வூதியத் தொகையைக் குறைப்பது என்பது சந்தாதாரரின் ஓய்வூதியத் தொகையைக் குறைப்பது என்று அர்த்தமாகும்.
APY இலிருந்து பவெளியேறுதல்
- தன்னார்வ வெளியேறுதல் (60 வயதிற்கு முன்னர் வெளியேறுதல்): APY கணக்குகளை மூடுவதற்கு முறையாக நிரப்பப்பட்ட “கணக்கு முடிப்பு படிவம் (தன்னார்வ வெளியேறு) படிவம்” மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்கள் சம்பந்தப்பட்ட APY-SP கிளையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்தப் படிவம் www.npscra.nsdl.co.in>>Home>>Atal Pension Yojana>>Forms>>Withdrawal Form>>Voluntary exit APY withdrawal form இல் கிடைக்கும். இது APY-SP கிளையிலும் கிடைக்கும். APY கணக்கு மூடப்பட்டிருந்தாலும் சந்தாதாரர் APY கணக்குடன் இணைக்கப்பட்ட சேமிப்பு வங்கிக் கணக்கை மூடக்கூடாது, ஏனெனில் முதிர்ச்சியடையும் முன் வெளியேறும்போது சந்தாதாரர் பெறும் முடிப்பு தொகைகள் APY இணைக்கப்பட்ட சேமிப்பு வங்கி கணக்கிற்கு மாற்றப்படும் என்பதால், அந்த கணக்கை மூடுவது முடிப்பு தொகையை மாற்றுவதில் சிக்கலை ஏற்படுத்தலாம். இறப்பு காரணமாக வெளியேறுதல்: உரிமைகோருபவர் முறையாக நிரப்பப்பட்ட “APY முடிப்பு படிவம் (இறப்பு)” மற்றும் இறப்பு சான்றிதழின் நகலை சம்பந்தப்பட்ட APY-SP கிளையில் சமர்ப்பிக்கலாம்.
- இந்த படிவம் www.npscra.nsdl.co.in>>Home>>Atal Pension Yojana>>Forms>>Withdrawal Form>>APY death form இல் கிடைக்கின்றது. இது APY-SP கிளையிலும் கிடைக்கும். 60 ஆண்டுகளுக்கு முன்னர் APY கணக்கு சந்தாதாரர் இறந்தால், சந்தாதாரரின் APY கணக்கில் பங்களிப்பை 60 வயது வரையிலான மீதமுள்ள அசல் காலத்திற்குத் தொடரும் விருப்பத்தேர்வு வாழ்க்கைத் துணைக்கு உள்ளது மற்றும் அது வாழ்க்கைத் துணையின் பெயரில் பராமரிக்கப்படலாம். இறந்த வாழ்க்கைத் துணை கணக்கைத் தொடர நியமனதாரர் விரும்பவில்லை எனில், அவன் / அவளுக்கு திரட்டப்பட்ட ஓய்வூதிய வளம் மட்டுமே திருப்பித் தரப்படும். அதாவது அவர் APY க்கு அளித்த உண்மையான நிகர பங்களிப்புகளில் ஈட்டப்பட்ட வட்டி (கணக்கு பராமரிப்பு கட்டணங்களைக் கழித்த பிறகு).
- 60 ஆண்டுகளுக்குப் பிறகு APY கணக்கு சந்தாதாரர் இறந்தால், மாதாந்திர உத்தரவாத ஓய்வூதியம் சந்தாதாரரின் வாழ்க்கைத் துணைக்கு செலுத்தப்படும் மற்றும் வாழ்க்கைத் துணை இல்லாமலோ அல்லது மரணமடைந்துவிட்டாலோ, சந்தாதாரர் ஓய்வூதியத் திட்டத்தின் படி திரட்டப்பட்ட ஓய்வூதிய வளம் / மொத்தத்தொகை சந்தாதாரரின் வாரிசுதாரருக்குச் செலுத்தப்படும். வாரிசுதாராக, சந்தாதாரரின் வாழ்க்கைத் துணைத் தவிர வேறு எவர் வேண்டுமானாலும் இருக்கலாம்.
APY கைபேசி செயலி
- APY கைபேசி செயலி APY பயனர்களுக்கு இலவசமாக கிடைக்கின்றது, இதில், சமீபத்திய 5 பங்களிப்புகளை சரிபார்க்கலாம் மற்றும் பரிவர்த்தனை அறிக்கை மற்றும் e-PRAN
- ஆகியவற்றை எந்த கட்டணமும் செலுத்தாமல் எந்த நேரத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். தேடல் விருப்பத்தில் ‘APY மற்றும் NPS Lite’ எனத் தட்டச்சு செய்வதன் மூலம் Android
- பயனர்கள் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து APY கைபேசி செயலியை பதிவிறக்கலாம்.
APY இன் கீழ் குறைகளை எழுப்புதல்
- சந்தாதாரர் எப்போது வேண்டுமானாலும் இலவசமாகவும், எங்கிருந்தும் www.npscra.nsdl.co.in >>Home >> select: NPS-Lite வழியாகவோ அல்லது CGMS வழியாகவோ தங்களது குறைகளை பதிவு செய்யலாம்.
- குறைகளை எழுப்பும் சந்தாதாரருக்கு எழுப்பப்பட்ட குறைகளுக்கு டோக்கன் எண் ஒதுக்கப்படும். சந்தாதாரர் குறைகளின் நிலையை “Check the status of Grievance / Enquiry already registered” என்பதன் கீழ் சரிபார்க்கலாம்.
Indian Goverment Atal Pension Yojana (APY) Atal Pension Scheme!!!
Atal Pension Yojano (APY) – Subscriber Information Guide
- The minimum monthly pension guaranteed by the Government of India is Rs. APY after 60 years in sizes of Rs.1000, Rs.2000, Rs.3000, Rs.4000 and Rs.5000 Provides.
- The subscriber must be an Indian citizen. The age of the subscriber to join APY should be between 18 and 40 years.
- The subscriber can join the APY through a bank branch / post office (via available online / offline methods).
- Providing details of the appointee and spouse in the APY account is mandatory.
- Payment can be made on a monthly or quarterly or half yearly basis by auto debit facility from the savings bank account.
Under APY, PRAN, transaction reports and contributions
- Go to www.npscra.nsdl.co.in >> Home >> Atal pension Yojana >> APY e-PRAN / Transaction statement view and when to get the transaction statement and PRAN card It can be viewed for free, from anywhere.
- https://enps.nsdl.com/eNPS/APYRePrintPRAN.html>>Atal Pension Yojana >> Print APY PRAN Card After paying the required amount on the hard drive PRAN The subscriber may request to issue the card.
- After joining the Atal Pension Scheme, a hard copy of the transaction statement will be sent to the registered address once a year, i.e. Atal will be sent to the address provided by the subscriber when registering for the pension scheme.
- All questions regarding APY account / contribution should be raised only at the APY-SP branch or via CGMS.
- Information on the status of contributions via CRA-NSDL from time to time SMS alerts to the subscriber’s registered mobile number Will be notified.
Modifying subscriber details under APY
- The APY subscriber is required to complete the desired changes in the transfer form and modify the personal information such as address and telephone number.
- The subscriber must submit the documents to the APY-SP branch. The form is available online at https://www.npscra.nsdl.co.in/nsdl-forms.php Can be downloaded from
- Periodic change of contribution e.g. Such as monthly contribution from quarterly contribution or half yearly contribution from quarterly contribution,
- The APY subscriber can make a written request after submitting it to the APY-SP branch.
Improving / reducing pensions
- APY subscribers can upgrade / reduce their pension amount once a financial year.
- This is to check the different amount to be deposited / withdrawn according to the selected new guaranteed pension amount The feature helps the user.
- Larger amounts will have to be deposited if upgraded, and additional contributions will be refunded to subscribers if reduced.
- Switching facility is available once a year at any time. The “APY Subscriber Change Form” https://www.npscra.nsdl.co.in/ >> Home >> Atal Pension Available at Yojana >> Forms >> Subscriber Maintenance >> Subscriber Modification Form and must be submitted to the APY-SP Branch. The amount of the pension
- Improving means increasing the subscriber’s pension and decreasing the pension amount means increasing the subscriber’s pension. That means reducing.
Departure from APY
- Voluntary Exit (Exit before the age of 60): A formally completed “Account Footer Form (Voluntary Exit) for closing APY accounts Form ”and other relevant documents should be submitted to the concerned APY-SP branch. This form www.npscra.nsdl.co.in >> Home >> Atal Pension Available at Yojana >> Forms >> Withdrawal Form >> Voluntary exit APY withdrawal form. It is also available at the APY-SP branch. Subscriber APY even if the APY account is closed
- The savings bank account linked to the account should not be closed because the subscriber will receive the footer amounts at the time of exit before maturity APY Since the linked savings will be transferred to the bank account, closing that account may cause problems in transferring the footer amount.
- Exit due to death: The claimant duly filled in the “APY Footer Form (Death)” and a copy of the Death Certificate relating to the APY-SP Can be submitted at the branch.
- This form is available at www.npscra.nsdl.co.in >> Home >> Atal Pension Yojana >> Forms >> Withdrawal Form >> APY death form. It is also available at the APY-SP branch.
- If the APY account subscriber dies before the age of 60, the subscription to the subscriber’s APY account will continue for the original period up to the age of 60 The option is for the spouse and it can be maintained in the name of the spouse. To continue the account of the deceased spouse If the nominee does not wish, only his / her accumulated pension will be refunded. I.e. the actual net he gave to APY Interest earned on contributions (after deducting account maintenance fees).
- If the APY account subscriber dies after 60 years, the monthly guaranteed pension will be paid to the subscriber’s spouse and spouse In case of absence or death, the pension resource / lump sum accumulated under the Subscriber Pension Scheme goes to the Subscriber’s heir Will be paid. The heir may be anyone other than the spouse’s spouse.
APY mobile processor
- APY Mobile Processor is available for free to APY users, including verifying the latest 5 contributions and the transaction report and e-PRAN Can be downloaded at any time without any charge. Android by typing ‘APY and NPS Lite’ in the search option Users can download the APY handset processor from the Google Play Store.
Raising grievances under APY
- Subscriber is free anytime, anywhere www.npscra.nsdl.co.in >> Home >> select: via NPS-Lite or via CGMS Complaints can be recorded.
- The token number will be assigned to the grievances raised to the grievance subscriber. Subscribe to the status of grievances “Check the status of Grievance / Inquiry already can be checked under “registered”.
+1
+1
+1
+1
+1
+1
+1