ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து வரும் தலிபான்கள் (Afghanistan in decline) தற்போது தங்களின் அட்டூழியத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லத் தொடங்கிவிட்டனர்.
ஆப்கனிய பெண்களை தங்கள் வசமாக்கும் ஆதி தீவிர முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர். பொதுமக்களுக்கு வெளிப்படையாகவே அச்சுறுத்தலை ஏற்படுத்தி, உங்களின் இளம் பெண்களை எங்கள் படை வீரர்களுக்கு மனைவியாக்குங்கள் என்று மிரட்டி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து பைடனின் அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள இந்த நிலையில் தலிபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் மேலோங்கி வருகிறது. ஆப்கான் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் ஆதி தீவிரமடைந்துள்ளது.
முக்கிய நகரங்கள் தலிபான்களின் வசமாகியுள்ளன. உள்நாட்டுப் போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கின்றது. தலிபான்கள் வெற்றியை பிரகடனம் செய்யும்போது, பொதுமக்களோ, அரசு அதிகாரிகளோ, ராணுவத்தினரோ எங்களின் வெற்றி குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்று கூறுகின்றனர்.
ஆனால், அவ்ர்கள் நடந்து கொள்வது வேறாக உள்ளது. தலிபான்களிடம் சரணடையும் ஆப்கான் ராணுவ வீரர்களை, காவல்துறையினரை ஈவு இரக்கமின்றி கொலை செய்கின்றனர். இது போர்க்குற்றமாகும் என்று கூறுகிறது பைடனின் அமெரிக்கா அரசு. அது மட்டுமல்லாது தற்போது ஆப்கான் பெண்களைக் கட்டாயப்படுத்தி தங்கள் போராளிகளுக்கு மணமுடிக்க முயல்கின்றனர்.
ஆப்கானிஸ்தானின் மற்றொரு மாகாண தலைநகரான காந்தகார் நகரையும் தலிபான்கள் கைப்பற்றினர். தலிபான்கள் கைபற்றுதலை தடுக்க முடியாமல் ஆப்கான் அரசு திணறிவருகிறது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 12 மாகாணங்கள் தலிபான்கள் வசம் வந்துள்ளது. அந்த நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய நகரம் காந்தகார். அந்த நகரையே தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர்.
முப்பது நாட்களில் ஆப்கானின் காபூலை தலிபான் தீவிரவாதிகள் தனிமைப்படுத்தி விடுவார்கள். மேலும் அதிகபட்சம் தொண்ணூறு நாட்களில் ஒட்டுமொத்த காபூலையும் தாலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவார்கள் என அமெரிக்கா எச்சரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆப்கான் மாகாணம் என்று முன்னேறிக் கொண்டிருக்கின்றனர் தலிபான்கள். இந்த நிலையில், கத்தார் நாட்டில் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பான சர்வதேச ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, பிரிட்டன், உஸ்பெகிஸ்தான், கத்தார் நாட்டுப் பிரதிநிதிகளும், ஐ.நா சபை மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இக்கூட்டத்தின் இரண்டாம் நாளான நேற்று, ஆப்கானிஸ்தான் சார்பில் சமாதானம் பேசும் கத்தாரின் வாயிலாக, தலிபான்களுக்கு ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் பங்கு அளிக்கிறோம் ஆனால், வன்முறையைக் கைவிடுங்கள் என்ற கோரிக்கை அவ்ர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதற்கெல்லாம் செவிமாடுக்க தலிபான்கள் தயார்நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. போரின் மூலம் தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டனர் தாலிபான்கள். தற்போது ஆப்கானில் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
Destroying Afghan government, Taliban violating !!!
The Taliban, who have been occupying Afghanistan, are now beginning to take their atrocities to the next level.
They have embarked on Adi’s intense effort to subjugate Afghan women. They are openly threatening the public and intimidating your young women into marrying our soldiers.
The Taliban’s dominance in Afghanistan has come at a time when Biden’s US forces have been withdrawn from Afghanistan. The civil war between Afghan government forces and the Taliban has intensified.
Major cities have fallen to the Taliban. There are reports that many innocent people are being killed in the civil war. When the Taliban declare victory, civilians, government officials and the military say we should not be afraid of our victory.
But, their behavior is different. Ewu mercilessly kills Afghan soldiers and policemen who surrender to the Taliban. Biden’s U.S. government says this is a war crime. Not only that but they are currently forcing Afghan women to marry their fighters.
The Taliban also captured the city of Kandahar, another provincial capital in Afghanistan. The Afghan government is struggling to prevent the Taliban from seizing power. As a result, the Taliban have taken control of 12 of Afghanistan’s 34 provinces. Kandahar is the second largest city in the country. The Taliban have taken control of the city.
Taliban militants will isolate Kabul in Afghanistan in 30 days. It is noteworthy that the United States warned that the Taliban would take control of the whole of Kabul in a maximum of ninety days.
The Taliban are advancing every day into every Afghan province. In this context, an international consultative meeting on peacekeeping in Afghanistan was held in Qatar. The meeting is attended by representatives of the United States, China, Pakistan, Russia, Britain, Uzbekistan, Qatar, as well as representatives of the United Nations and the European Union.
On the second day of the meeting yesterday, a call was made to the Taliban through Qatar, which is making peace talks on behalf of Afghanistan. In it, we share power in Afghanistan but urge them to end violence.
But the Taliban do not seem ready to listen. The Taliban have begun to show their demanding face through the war. Currently, human rights abuses are on the rise in Afghanistan.