மத்திய அரசின் ஒளிப்பதிவு சட்ட திருத்த விவகாரத்தில் நடிகர் சூர்யாவை பா.ஜ.க.வினர் மிரட்டினால் எதிர்விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா அரசியலமைப்புச்சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும், இந்நாடு கொண்டிருக்கும் பன்மைத்துவப் பண்பிற்கு முரணாகவும் ஒற்றைமயமாக்கலையும், அதிகாரக்குவிப்பையும் செய்து வரும் பாஜக அரசின் கொடுங்கோல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகக் கொண்டு வரப்பட்டிருக்கிற கறுப்புச்சட்டமான ஒளிப்பதிவு சட்டத்திருத்தத்தை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்த அன்புத்தம்பி சூர்யா அவர்களை அச்சுறுத்தும் நோக்கோடு செயல்பட்டு வரும் பாஜகவின் செயல்பாடு வன்மையான கண்டனத்திற்குரியது. திரைக்கலைஞர்கள் சமூகத்தின் ஓர் அங்கம்தான். அவர்களும் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் குரலெழுப்ப வேண்டுமெனும் தார்மீகப் பொறுப்புணர்ந்து அநீதிக்கெதிரான தனது அறச்சீற்றத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் தம்பி சூர்யாவின் நெஞ்சுரமும், துணிவும் போற்றுதற்குரியது;
கருத்துச்சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கிற இச்சட்டத்திருத்தத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும், அதனுள்ளிருக்கும் பெரும் ஆபத்தினையும், உள் அரசியலையும் உணர்ந்து தனது ஆழ்மனக்குமுறலை வெளிப்படுத்தியிருப்பது மிக நேர்மையானது. அதனை உளப்பூர்வமாக வரவேற்கிறேன். அவரது இந்நிலைப்பாட்டுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்குமென உறுதியளிக்கிறேன்.
அறிவியலுக்கும், அறிவுக்கும் அப்பாலான கற்பனை உலகத்தில் வாழ்ந்து, கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, அடக்குமுறையை ஏவுவதும், தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், ஆபாசமாகப் பேசுவதும், சமூக விரோதி, தேசத்துரோகியென முத்திரை குத்தி ஒடுக்குவதுமென சனநாயக விரோதங்களை அரங்கேற்றி வருகிறது பாஜக. தம்பி சூர்யாவை ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் குறித்து விவாதிக்க அழைப்பது கேலிக்கூத்தானது.
தம்பி சூர்யாவை விவாதத்திற்கு அழைக்கும் பாஜகவின் தலைவர் பெருமக்களை, ஒரே மேடையில் விவாதிக்க நானும் அழைக்கிறேன்; பாஜகவின் ஆட்சிமுறை குறித்தும், அவர்கள் முன்வைக்கிற திட்டங்கள் குறித்தும், கொண்டுவருகிற சட்டங்கள் குறித்தும், பொருளாதாரக்கொள்கைகள் குறித்தும், தற்போது கொண்டு வரப்பட்டிருக்கிற ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் குறித்தும் வாதிட தர்க்கரீதியிலான கருத்தியல் சண்டைக்கு அறைகூவல் விடுக்கிறேன். என்னோடும், என் தம்பிகளோடும் விவாதிக்கத் தயாரா?
எங்களை எதிர்கொள்ளத் துளியளவாவது துணிவிருக்கிறதா? எங்களைத் தாண்டித்தான் தம்பி சூர்யாவை நெருங்க முடியும். தம்பி சூர்யா தனியொரு நபரென நினைத்துக் கொண்டு, மத்தியில் இருக்கும் அதிகாரப்பின்புலத்தைக் கொண்டு அவரை அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் அது மோசமான எதிர்விளைவுகளைத் தருமென எச்சரிக்கிறேன். இவ்வாறு சீமான் எச்சரித்துள்ளார்.
Seeman warns – BJP can approach actor Surya beyond us
Seeman, the chief co-ordinator of the Naam Tamil Party, has warned that reactions to the BJP’s intimidation of actor Surya over the federal government’s cinematography law amendment would be worse.
Seeman’s statement in this regard: Anbuttambi Suryat, who has been active in opposing the black law cinematic legislation against the federalism enshrined in the Constitution of India and against the tyrannical actions of the BJP government which has been uniting and deregulating the pluralism that this country possesses. Screenwriters are part of the community. Brother Surya’s courage and courage are commendable as he continues to express his indignation against injustice with the moral responsibility to raise their voices for the soil and the people;
Realizing the need to oppose this amendment, which has been brought in to stifle the voice of freedom of expression, and the great danger it poses, and its internal politics, it is most sincere. I wholeheartedly welcome it. I assure you that we, the Tamil Party, will stand by his position.
The BJP, living in an imaginary world beyond science and knowledge, is incapable of confronting ideology, inciting repression, launching personal attacks, speaking obscenely, branding it as anti-social and anti-national. It is ridiculous to invite brother Surya to discuss the cinematography bill.
I also invite the BJP leader, who invites Thampi Surya to the debate, to discuss on the same platform; I call for a logical ideological battle over the BJP regime, the plans they are proposing, the laws they are bringing in, the economic policies they are bringing in and the cinematography legislation they are currently bringing. Ready to discuss with me and my siblings?
Do you have the guts to face us? Only beyond us can we approach brother Surya. I warn that it will have a bad reaction if brother Surya thinks of himself as an individual and tries to intimidate or intimidate him with the power structure in the middle. Thus Seaman warns.