நடிகை குஷ்புவுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று அந்த நடிகை ஷகீலா கூறியுள்ளார். எனக்கு அவர் சீனியர். காங்கிரசில் நான் இணைந்தது போல, இந்த கட்சியில் இருந்து அவர் விலகிச் சென்றதற்கும் ஒரு காரணம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு இப்போதான் வந்திருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா பல விஷயங்களை கத்துக்கிட்டு இருக்கேன். இனி என் அரசியல் ஆட்டத்தை போகப்போக பார்ப்பீங்க என்றும் மலையாள நடிகை ஷகீலா தெரிவித்துள்ளார்.
சினிமாவில் ஓஹோ என்று புகழோடு இருந்த பல நடிகைகள் தற்போது அரசியலுக்கு வந்து விட்டனர். பல்லான சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்து குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழடைந்த நடிகை ஷகீலா தற்போது தமிழக அரசியலில் தான் முதல் காலை எடுத்து வைத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா தற்போது தன் காலை பதித்துள்ளார். கட்சியில் இணைந்த உடனேயே அவருக்கு மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அரசியலில் இணைந்தது பற்றியும் அடுத்த கட்ட நடவடிக்கைகள், தனது அரசியல் பயணம் பற்றியும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார் நடிகை ஷகீலா. பெண்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் அரசியலுக்கு வந்து இருக்கிறேன். நடிகை என்பதை தாண்டி ஒரு தனி அடையாளம், தனி அதிகாரம் பெற விரும்புகிறேன். நல்லது செய்ய வேண்டும் என்றாலும் கூட ஒரு பவர் வேண்டும்.
நிச்சயமாக எனது தேவைக்காக மட்டுமே அரசியலுக்கு வரவில்லை. காங்கிரசில் இருந்து குஷ்பு விலகியதால், அந்த இடத்தை நிரப்புவதற்காக நான் வந்துள்ளேனா? என்று கேட்கிறார்கள். நிச்சயமாக இல்லை. நடிகை குஷ்புவுடன் என்னை ஒப்பிட வேண்டாம். எனக்கு அவர் இங்கு சீனியர். காங்கிரசில் நான் இணைந்தது போல, இந்த கட்சியில் இருந்து அவர் விலகிச் சென்றதற்கும் ஒரு காரணம் இருக்கும் என்று கூறியுள்ளார் நடிகை ஷகீலா.
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் எனக்கு தருகிறது என்று கூறிய ஷகீலா, பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். கட்சித் தலைமை அனுமதி அளிக்கும் பட்சத்தில் நிச்சயம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். அரசியல் ஒருபுறம் இருந்தாலும் எனது சினிமா பயணம் தொடரும் என்றும் ஷகீலா கூறியுள்ளார்.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளீர்கள். உங்களது அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும்? தேர்தல் களத்தில் மற்ற கட்சிகளை அதிரடியாக விமர்சித்து பேசுவீர்களா?, என்று ஷகீலாவை சந்தித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நடிகை ஷகீலா, ஏன் இத்தனை கேள்வி. இப்போதான் அரசியலுக்கு வந்திருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா பல விஷயங்களை கத்துக்கிட்டு இருக்கேன். இனி என் அரசியல் ஆட்டத்தை தமிழகத்தில் போகப்போக பார்ப்பீங்க என்று கூறியுள்ளார். ஷகீலாவின் அதிரடி அரசியல் ஆட்டத்தை பார்க்க தமிழக மக்கள் காத்துகொண்டு உள்ளனர்.
Actress Shakeela is showing action in Tamil Nadu politics that my game is the beginning of the political game, go and see !!!
Actress Shakila has told me not to compare myself with actress Khushboo. To me he is senior. He also said that as I joined the Congress, there would be a reason for his departure from this party.
I have just come to politics. Little by little I was screaming so many things. Malayalam actress Shakeela has said that she will watch my political game from now on.
Many actresses who were hailed as Oho in cinema have now come to politics. Actress Shakeela, who came to the big screen from Pallana Cinema and became famous through her show Cuckoo With Clown, is currently making her debut in Tamil Nadu politics.
Actress Shakila is currently in the Tamil Nadu Congress Party. Soon after joining the party, he was appointed General Secretary of the Department of Human Rights. Actress Shakila has given an interview to the media about her involvement in politics, her next steps and her political journey. I have come to politics with the intention of doing good to women. I want to get a separate identity, separate power beyond being an actress. Have a Power though to do good though.
Of course I did not come to politics only for my need. Have I come to fill the vacancy left by Khushbu’s resignation from Congress? They ask. Of course not. Do not compare me with actress Khushboo. To me he is senior here. Actress Shakila has said that as I joined the Congress, there will be a reason for her leaving the party.
Violence against girls and women is on the rise not only in Tamil Nadu but across the country. Shakeela said it hurts me so much that those involved in sexual violence should be sentenced to death. I will definitely campaign if the party leadership gives permission. “Politics aside, my cinema journey will continue,” she said.
You have come to politics from cinema. What will be your next phase moves? Reporters who met Shakeela asked, “Will you be critical of other parties in the constituency?” Actress Shakila replied, “Why so many questions. I have just come to politics. Little by little I was screaming so many things. He has told me to watch my political game in Tamil Nadu. The people of Tamil Nadu are waiting to see Shakeela’s action political game.