சென்னை அருகேயுள்ள கொரட்டூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சமீப காலமாக பி.எஸ்.என்.எல் சேவையில் தடை ஏற்பட்டுக்கொண்டே வந்துள்ளது. இது குறித்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் புகார் குறித்து ஆய்வு செய்து, மீண்டும் சேவையைச் சரி செய்துக் கொடுத்துள்ளனர். ஆனால், மீண்டும் இணைப்பு தடை தொடர்ந்து ஏற்பட்டதால், மீண்டும் பி.எஸ்.என்.எல் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர் வாடிக்கையாளர்கள்.
இப்போது தானே சரி செய்தோம் ஏன் திரும்பவும் அதே இடத்திலிருந்து புகார் வருகிறது என பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் கொரட்டூர் பி.எஸ்.என்.எல் ஊழியர் அப்பன்ராஜ், வீட்டுவசதி வாரிய குடியிருப்பின் 31-ஆம் தெருவில் அமைந்துள்ள பி.எஸ்.என்.எல் இணைப்புப் பெட்டியை ஆய்வு செய்ய வந்திருந்தார். அப்போது, ஒருவர் அந்த இணைப்பு பெட்டியைத் திறந்துவைத்துக்கொண்டு, இணைப்புகளைத் துண்டித்துக் கொண்டிருந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பன்ராஜ், அந்த நபரிடம் விசாரித்துள்ளார். அப்போது இவரின் கேள்விக்கு அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அப்பன்ராஜ் அவரை பிடித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து, அந்த நபரிடம் காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அந்த நபர் சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்றும், ஏர்டெல் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. மேலும், பி.எஸ்.என்.எல் இணைப்புகளைத் துண்டித்து, ஏர்டெல் நிறுவனத்தில் இணைந்துவிட்டால் இணைய வேகம் மிகவும் அதிகமாக இருக்கும்.
எந்த பிரச்சினையும் வராது பொதுமக்களிடம் மூளைச்சலவை செய்து பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களை தங்கள் நிறுவனத்தின் பக்கம் இழுத்து வந்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலும் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர், அந்த நபரிடம் இருந்து போன் மற்றும் இணைப்பைத் துண்டிக்கப் பயன்படுத்திய சாதனங்களை காவல் அதிகாரிகள் கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏர்டெல் நிறுவன ஊழியரின் இத்தகைய செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Airtel employee who disconnected from the government BSNL to show that we are the best !!!
BSNL service has been suspended in the Tamil Nadu Housing Board residential area in Korattur near Chennai recently. BSNL customers have complained to BSNL about this.
Following this, BSNL employees investigated the complaint and re-adjusted the service. However, customers complained to BSNL officials again as the reconnection ban continued.
Now BSNL employees are skeptical as to why the complaint is coming from the same place again. In this context, the day before yesterday, Appanraj, a BSNL employee from Korattur, had come to inspect the BSNL connection box located at 31st Street, Housing Board flats. Then, someone opened the connection box and disconnected.
Appanraj was shocked to see this and inquired from the person. The person then answered his question inconsistently from front to back. Suspecting this, Appanraj arrested him and handed him over to the Korattur police station.
Subsequently, the person was questioned by police. During the investigation, it was revealed that the person was Jayaprakash from Ayanavaram area of Chennai and had been working as an engineer in Airtel. Also, if BSNL disconnects and joins Airtel, the internet speed will be much higher.
The investigation also revealed the shocking news that BSNL has been brainwashing the public and dragging its customers to their company without any problems. Later, the police seized the phone and the devices used to disconnect it from the person, registered a case and are investigating. Such an action by an Airtel employee has caused great consternation among the people of the area.