இஸ்ரேலைச் சேர்ந்த டீ-.ஐ.டி., என்ற நிறுவனம், ஆழ்மன நினைவலை என்று பொருள்படும், “டீப் நோஸ்டால்ஜியா” என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவைக் கொண்டு இயங்கும் இந்த நுட்பத்தை பயன்படுக்தி, பழைய புகைப்படம் ஒன்றைக் கொடுத்துவிட்டால், அந்த உருவத்திற்கு அது அசைவைத் தந்து, கண் சிமிட்டி, சிரிக்கும் சலனப்படமாக மாற்றிக் காட்டி மக்களை அசத்துகிறது.
தங்களுக்கு பிரியமான, ஆனால், இறந்துவிட்ட ஒருவரை இதுபோல, சலனப்படமாக பார்க்கும்போது ஏற்படும் பெரரும் மகிழ்ச்சியை நாம் அளவிட முடியாது. அதை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது நடைமுறைப்படுத்தி காட்டியுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை, “மைஹெரிடேஜ்” என்ற நிறுவனம் தன் இணைய தளத்தில் பயன்படுத்த துவங்கிய சில மணி நேரங்களில், 10 லட்சம் பேருக்கு மேல் தங்கள் நெருங்கிய காலமான உறவினர்களின் புகைப்படங்களைத் கொடுத்து, அவர்களது அசைவுகள் அடங்கிய படத்துணுக்கை பெற்றுக்கொண்டனர்.
https://www.myheritage.com/deep-nostalgia
சிலருக்கு, காலமான உறவினரை இப்படி பார்ப்பது பெரும் அதிர்ச்சியையும், சங்கடத்தையும் தரக்கூடும். எனவே, மைஹெரிடேஜ் நிறுவனம், இது எல்லோருக்குமானது அல்ல என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதை சிலர் தவறாக பயன்படுத்துவர் என்பதால், இந்த படத்துணுகிற்கு குரல் சேர்க்கப்படமாட்டாது எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
Photos of the living dead !!!
The Israeli company T-IT has developed a technology called “Deep Nostalgia”, which means deep memory. Using this technique, which works with artificial intelligence, when an old photo is given, it gives movement to the image, blinks and turns it into a smiling motion picture.
We cannot measure the great joy that comes from watching a movie about someone they love, but who has died. It is currently being implemented by artificial intelligence technology.
Within hours of the technology being used by “MyHeritage” on its website, more than 10 lakh people were given photos of their close relatives and pictures of their movements.
https://www.myheritage.com/deep-nostalgia
For some, seeing a deceased relative like this can come as a great shock and embarrassment. Therefore, MyHeritage has warned that this is not for everyone. The company has also announced that the voice will not be added to the film as it will be misused by some.