19 செயற்கைகோள்களை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட் இன்று காலை 10.24 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இதற்கான 25 மணி 30 நிமிட கவுன்ட்டவுன் நேற்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, பிரேசிலின் அமேசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்தியது.
பிஎஸ்எல்வி ராக்கெட் வரிசையில் இன்று 59 ஆவது ராக்கெட்டை இஸ்ரோ செலுத்தியது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து காலை 10.24 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
இதற்கான கவுண்ட்டவுன் நேற்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது. முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள 19 செயற்கைகோள்களின் செயல்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
தொடர்ந்து கவுன்ட்டவுனை முடித்துக் கொண்டு சரியான நேரத்தில் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது என விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள். இஸ்ரோ முதல்முதலாக வணிக ரீதியில் பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்திய அமைப்பின் சதீஷ் தவான் சாட், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜிஎச் பொறியியல் கல்லூரி, கோவை சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி கூட்டமைப்பில் உருவான யூனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைகோள்கள், பிரேசிலின் அமோசானியா, அமெரிக்காவின் 13 நானோ செயற்கைகோள்கள் என மொத்தம் 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. பாதுகாப்பு படையினரின் பயன்பாட்டுக்காக சிந்து நேத்ரா செயற்கைகோள் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசானியாவின் எடை 637 கிலோவாகும். இதன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள். பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டது. இந்த சதீஷ் தவான் சாட் செயற்கைகோளில் பிரதமர் மோடியின் படமும் பகவத் கீதை வாசகமும் இடம்பெற்றுள்ளது.
PSLV C51 launches with satellites in Chennai and Coimbatore
The PSLV C51 rocket carrying 19 satellites was launched at 10.24 this morning. The 25-hour, 30-minute countdown began at 8.54am yesterday.
The Indian Space Research Organization (ISRO) today launched the PSLV C51 rocket with 19 satellites, including Brazil’s Amazonia-1.
ISRO today launched the 59th rocket in the PSLV rocket range. It took off from the Satish Dhawan Space Center in Sriharikota, Andhra Pradesh at 10.24 am.
The countdown began at 8.54am yesterday. They are also actively monitoring the operations of the PSLV C51 rocket stationed on the first rocket launch site and the 19 satellites fitted to it.
Scientists say the rocket flew into space just in time to complete the countdown. ISRO today launched its first commercial PSLV C51 rocket.
ISRO-produced Sindhu Netra, Space Kids India’s Satish Dhawan Chad, Chennai Japier College of Technology, Nagpur GH College of Engineering and UnitySat, a consortium of Coimbatore’s College of Power Engineering and Technology, are among the five satellites with a total of 19 satellites, including 13 nanosatellites in Brazil’s Amazon and 13 in the United States. The Indus Netra satellite is said to be used by security forces.
The weight of Amazonia is 637 kg. Its lifespan is 4 years. Designed on behalf of the Brazilian Space Research Organization. The Satish Dhawan Chad satellite features a picture of Prime Minister Modi and a recitation of the Bhagwat Gita.