பிரான்ஸ் நாட்டின் தலைநகரில் இரகசிய அறை ஒன்றினுள் இருந்து கிலோ கணக்கில் தங்கம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையை சார்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 10-வது வட்டாரத்தில், இருக்கும் புகைப்பட ஸ்டுடியோ ஒன்றின் பின்னால் இருக்கும் இரகசிய அ றையில் தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சென்ற புதன் கிழமை காவல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் அதிகாரிகள், ஸ்டுடியோவினை சுற்றி அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு விலைமதிப்புடைய தங்க நகைகள், அதிக விலை கொண்ட ஆடம்பர கற்ககள், கைக்கடிகாரங்கள் மற்றும் 100000 யூரோவுக்கும் அதிகமான ரொக்கப்பணம் போன்றவை கண்டுபிடித்துள்ளனர்.
அதன் பிறகு இந்த பொருட்களின் உரிமையாளர் யார் என்று விசாரித்துள்ளனர். அப்போது யார் என்ற உண்மை வெளிவராததால், காவல் அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், முதற்கட்ட விசாரணையாக, ஸ்டூடியோவின் காவலராக பணிபுரிந்து வரும் இலங்கையைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் ஒய்சே நகரில் வசித்து வந்ததாகவும் காவல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
Kilograms of gold found in a secret room – One arrested – Photos released!!!
A Sri Lankan man has been arrested after a kilogram of gold was recovered from a secret room in the French capital.
Last Wednesday, police received information that gold jewelery was hidden in a secret compartment behind an existing photo studio in the 10th arrondissement of the French capital, Paris.
Police rushed to the spot and raided the studio. At that time, they found valuable gold jewelry, expensive luxury jewelry, watches and more than 100000 euros in cash.
They then inquired as to who was the owner of these items. Police are investigating as the identity of the accused has not been revealed.
Also, as a preliminary investigation, a 50-year-old Sri Lankan man working as a guard at the studio has been arrested and lived in Oyster City, police said.