தமிழின் தொன்மையை உலகுக்கு அறிவித்தவர் ஐரோப்பியர் கால்டுவெல் ஐயர், தமிழ் மொழி பற்றினால் சூரிய நாராயண சாஸ்திரி என்ற வைதீக பெயரை துறந்து தனித்தமிழுக்கு வித்திட்டவர், தமிழ் திருப்பெயர் தாங்கிய பரிதி மாற் கலைஞர்.
உரமிட்டு செடியாக வளர்த்தவர் மறை மலை அடிகளார். அந்த செடியை மரமாக ஆக்கி நமக்கு நிழல் கொடுக்க வைத்தவர் செந்தமிழ்ச் செல்வர் தேவ நேயப் பாவாணர்.
தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென வாதிட்டவர்.
கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ஆவார்.
தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பியவர்.
தமிழ்ச் சொற் பிறப்பியல் அகர முதலியின் தந்தை என்று போற்றப்படுபவர். 1974-இல் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலித் திட்டத்தின் முதல் இயக்குநராய் பொறுப்பேற்று முத்திரைப் பதித்த பெருமகன் இவர்.
அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் பாவாணர் பேராசிரியராகப் பணிபுரிந்த போது அங்கு ஏற்பட்ட சிக்கலால் எனக்கு “வறுமையும் உண்டு அதோடு எனக்கு மானமும் உண்டு” என்று கூறிவிட்டு பல்கலைக்கழகப் பணியிலிருந்து வெளியேறினார்.
அப்போது ’என்னோடு தமிழும் வெளியேறியது’ என்றார்.
இவரது தமிழ் தொண்டை பாராட்டி 1979-ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். செந்தமிழ்ச்செல்வர் என்னும் விருதை வழங்கி பாவாணரைக் கௌரவித்தார்.
அகர முதலியின் முதல் தொகுப்பு 1985இல் வெளிவந்தது. தமது இறுதிக் காலத்தை எவரும் எளிதில் நெருங்க முடியாத புலமைத்துவம் வாய்ந்த இந்தப் பணிக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்.
தமிழ், ஆங்கிலம் வடமொழிகளில் புலமை பெற்றவர். அதனால்தான் ஆரியத்தின் பொய்மைகளையும்,அதன் பேதைமையையும் ஊருக்கும் உலகுக்கும் காட்டினார்.
எந்தெந்த தமிழ்ச் சொற்கள் எல்லாம் ஆரிய மயமாக்கப்பட்டன என்பதை வேர் வரை சென்று உணர வைத்த ஆய்வுக் கடல் அவர்!
தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியுள்ளார். 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
ஒவ்வொன்றும் முத்துக் குவியல்.150 ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தமிழ் உலகிற்குத் தந்த கொடையாளரும் ஆவார்.
இவருக்காக,. விருதுநகர் மாவட்டம் இராசபாளையம் அருகிலுள்ள முறம்பில் இவருக்காக சிலையும், நூலகமும், வளைவும் “பெரும்புலவர் அய்யா படிக்கராமு, தமிழாசிரியர் ஆ.நெடுஞ்சேரலாதன்” மற்றும் தமிழ் ஆர்வலர்களின் சீரிய முயற்சியில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
Today is the birthday of Devanayapavanar, the language who volunteered for Tamil for 50 out of the 79 years he lived !!!
Caldwell Iyer, a European, was the one who announced the antiquity of Tamil to the world.
The one who grows the composted plant is the hidden mountain foothills. The person who made the plant a tree and gave it shade is Senthamizh Selvar Deva Neya Pawanar.
Tamil is the oldest of the world’s languages and was formed as a pure language in the most ancient times; Who argued that it was the mother tongue of Dravida and the language of the Aryans.
Pawan was the founder of many of his words, including Greek, Latin, and Samaritan.
Pointing out the richness and richness of the Tamil roots, he took the path of its development to the world through his books.
He is revered as the father of the Tamil etymology Agar Mudali. He is the grandson of the first director of the Senthamizh Etymology Grand Project, created by the Government of Tamil Nadu in 1974.
When Pawanar was a professor at Anna Hill University, he left the university saying, “I have poverty and I have dignity” because of the problem there.
Then he said ‘Tamil also went out with me’.
MGR, who was the Chief Minister of Tamil Nadu in 1979, praised his Tamil throat. He honored Bhavana with the award of Senthamizhchelvar.
The first collection of Agar Mudali was published in 1985. Who has dedicated himself to this task of scholarship which no one can easily approach in his final days.
Scholar in Tamil and English. That is why he showed the lies of the Aryans and its genius to the city and the world.
He is the ocean of research that went to the root and realized which Tamil words were all Aryanized!
He has written many books not only in Tamil but also in English. Has authored over 30 books.
Each is a heap of pearls. He is also the donor who has given 150 research papers to the Tamil world.
For him,. The statue, library and arch for him at Rajapuram in Virudhunagar district are majestically displayed by “Perumbulavar Ayya Padikaramu, Tamil Editor A. Neduncheralathan” and the zealous efforts of Tamil activists.