இந்தியாவில் ஒரே நேரத்தில் நான்கு உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன, அதுவும் நெடுஞ்சாலை அமைப்பதில் என்பது மிகவும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. வெறும் 24 மணி நேரத்தில் 5 ஆயிரம் டன் சிமென்ட் மற்றும் 500 டன் பனியை பயன்படுத்தி 2 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை போடப்பட்டுள்ளது.
இந்தியாவின் சாலை கட்டுமானத்தில், இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கபடுவது இந்த அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானம் ஆகும். குஜராத்தின் வதோதரா (Vadodara) நகரை, மும்பை மற்றும் திலைநகர் டெல்லியுடன் நேரடியாக இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை (Expressway) இதுவாகும்.
தற்போது குஜராத்தில் பருச் அதிவேக நெடுஞ்சாலை (Bharuch Expressway) பணிகள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 2-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று 2 -கி.மீ நீளமும் 18.75 மீட்டர் அகலமும் கொண்ட இந்த நெடுஞ்சாலை வெறும் 24 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இதற்காக, 1.10 லட்சம் மூட்டை சிமென்ட் (5.5 ஆயிரம் டன்) மற்றும் 500 டன் பனியும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கோல்டன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (Golden Book of World Records), மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (India Book of Records) என இரண்டு சாதனைப் பதிவுகளில், 2 மணி நேரத்தில் நெடுஞ்சாலை உருவாக்கப்பட்ட இந்த சாதனை அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலாவது சாதனை 12 ஆயிரம் டன் சிமென்ட் கான்கிரீட் கலவையை உற்பத்தி செய்தது. இரண்டாவது சாதனை கலக்கப்பட்ட கான்கிரீட்டை மிக வேகமாக சாலை போடுவது, மூன்றாவது சாதனை ஒரு அடி தடிமன் மற்றும் 18.75 மீட்டர் அகலம் கொண்ட கட்டுமானத்தை அமைத்தது என்பதாகும். நான்காவது சாதனை, தரத்தில் எந்தவித சமரசமும் செய்துக் கொள்ளாமல் நடைபாதையை பராமரிப்பது . இந்த பணிகள் அனைத்தும் வெறும் 24 மணி நேரத்தில் செய்யப்பட்டுள்ளது, இதனால் இந்த அதிவேக நெடுஞ்சாலை ஒரே நேரத்தில் நான்கு உலக சாதனைகளை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது இந்தியா.
India builds 2 km highway in 24 hours using ice
India has set four world records at the same time, and that too in the construction of the highway has received much praise. In just 24 hours, 2 km of highway has been laid using 5,000 tonnes of cement and 500 tonnes of snow.
This is the greatest achievement in road construction in India. It is the expressway that directly connects the city of Vadodara in Gujarat with Mumbai and the capital city of Delhi.
The Bharuch Expressway is currently under construction in Gujarat. The 2km long and 18.75m wide highway was completed in just 24 hours on Tuesday, February 2nd. For this, 1.10 lakh bundles of cement (5.5 thousand tons) and 500 tons of ice have been used.
The record was set in two hours, the Golden Book of World Records (Golden Book of World Records) and the India Book of Records.
The first record was the production of 12 thousand tons of cement concrete mix. The second achievement was laying the concrete concrete road very fast, while the third achievement was setting up a structure one foot thick and 18.75 meters wide. The fourth achievement is to maintain the pavement without making any compromises in quality. All these works have been completed in just 24 hours, thus India has set a record by setting four world records on this expressway simultaneously.