ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள உள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடன் டெஸ்ட் தொடர் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் தற்போதுவரை 2 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி தற்போது சிட்னியில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்து இருந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 338 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 4 விக்கெட்களும், பும்ரா மற்றும் சைனி தல 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராகா களம் இறங்கிய ரோகித் சர்மா (26 ரன்கள்) தனக்கே உரித்தான சில அதிரடி ஷாட்களை அடித்து வந்தார். ஆனால் ஹேசில்வுட் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சுப்மான் கில் தனது முதல் அரை சதம் அடித்து பெவிலியன் திரும்பினார்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்து இருந்தது. இந்நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரஹானே 5 ரன்களிலும் புஜாரா 9 ரன்களிலும் களத்தில் இறங்கினர். ரகானே 22 ரன்னில் ஆட்டமிழந்தார். புஜாரா 50 ரன்னுக்கும், பண்ட் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணியில், ஹனுமா விஹாரி 4 ரன், அஸ்வின் 10 ரன், பும்ரா ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆகினார்கள்.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய ஜடேஜா 37 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 244 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி 94 ரன்கள் பின்தங்கி முதல் இனிங்கசை முடித்துள்ளது.