கடந்த 15-ஆம் நூற்றாண்டுவரை மருத்துவ உயிரியலில் வளர்ச்சிகள் குறைவாகவே இருந்து வந்த காலம்அது, மனிதனின் உடலிற்குள் என்ன இருக்கும் எப்படி இருக்கும் என்று எவருக்குமே தெரியாத காலமாக இருந்து வந்தது.
அப்படி பட்ட கால சூழலில் வாழ்ந்து வந்த அறிவியல் மருத்துவ மேதை ஒருவர், மனிதனின் உடலை அறுத்து பார்த்து மனித உடற் கூறுயியல் உருவாகுவதற்கு காரணமா இருந்தார், அவர் தான் மருத்துவ மேதை “ஆண்ட்ரியாஸ் வெசாலியஸ்”. மனித உடலை இவர் ஆராய்ந்து அறிந்ததால் இவரை நவீன உடல் கூறியியலின் தந்தை என்றே அழைத்தனர் மருத்துவ உலகில்.
இவர் அன்றைய காலத்தின் ஓரு பெரும் மருத்துவ குடும்பத்தில் 1514-ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் உள்ள ஃபிரசெல்ஸ் என்ற நகரில் பிறந்துள்ளார். சிறு வயதில் அங்கு வளர்ந்த அவர் பதுவா என்ற பல்கலைக்கழகத்தில் பயின்று தன்னுடய மருத்துவ படிப்பை முடித்து, பட்டம் பெற்றார். அவ்வாறு பயின்று முடித்து வந்த அவருக்கு, தனது இளம்வயதான 23-வது வயதிலேயே உடற் கூறுயியல் பேரசிரியராக பணி செய்யும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதனால் இவர் மிகச்சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக அன்றைய தினங்களில் வலம் வந்தார். இதனால் வெசாலியஸ் அன்றய நாட்களில் மிகப் பிரபலமான மருத்துவராக விளங்கினார்.
அவ்வாறு பணியாற்றிய அவர் பல விலங்கின மற்றும் பாலூட்டிகளை வெட்டி பார்த்து அவற்றின் உடல் உள்ளமைப்பு கூறுகளை தனது மருத்துவ திறனின் மூலம் நன்கு ஆராய்ந்து, அவற்றை அறிந்து கொண்டார். இதில் முக்கிய திருப்பமாக விலங்குகளை மட்டுமே வெட்டி பார்த்து ஆராய்ந்து வந்த அவருக்கு மனித்னின் உள் உடல் கூறுகளை ஆராய்ந்து அறிய அவர் வுரும்பினார். அதனால் அவர் இரவு நேரங்களில் விழித்திருந்து தனது இருப்பிடதிற்கு அருகாமையில் உள்ள இடுகாட்டிற்கு தனியே சென்று அங்கு புதைக்கப்பட்டு இருந்த பிணங்களை தோண்டி எடுத்து அதை அவர் வைத்திருந்த தனி மருத்துவ அறையில் அவற்றை வெட்டி பார்த்து, மனிதனின் உள்ளமைப்பு உடல் கூறுகளை கண்டறிந்தார்.
அவ்வாறு அவர் கொண்டுவரும் பிணங்கள் துர்நாற்றம் வீசும், ஆனால் அதை பொறுத்துக்கொண்டு தனியே பெரும் சிரமங்களிடையில் எவருக்கும் தெரியாமல் அதை தனது மருத்துவ அறைக்கு கொண்டு வந்து ஆராயிச்சி செய்வார் ஆனால் அவரல் கொண்டு வரப்பட்ட உடல்கள் மிகவும் மோசமான அழுகிய நிலையில் இருந்ததால் அவரால் முழு மனித உடலையும் ஆராய இயலவில்லை. அதனால் அவர் மிகவும் வருத்ததுத்டன் அங்கும் இங்குமாக ஒரு நாள் இரவில் வெளியில் நடமாடிக்கொண்டு இருந்தார்.
அவரு இருக்கும் பொது அந்த நாள் இரவில் ஒரு நல்ல பிணம் ஒன்று தூர்நாற்றம் வீசாத மிகவும் நல்ல நிலையில் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தது. அதை கழுகுகள் கொத்தி தின்று கொண்டு இருந்ததை பார்த்த வெசாலியஸ், உடனே அதை யாருக்கும் தெரியாமல் இறக்கி தனது மருத்துவ அறைக்கு கொண்டுவந்து அதை மிகவும் கவனமாக அதன் இயற்கை நிலை மாறாமல் அந்த எலும்புகளை கோர்த்து கட்டினார் அதுதான் இந்த உலகில் முதன் முதலில் வெசாலியஸால் உருவாக்க பட்ட எலும்புக்கூடு ஆகும். ஆனால் இதற்கு முன்பு யாரும் ஒரு முழு எலும்புகூட்டை உருவாக்கியாதோ பார்த்ததோ கிடையாது.
இவ்வாறு அவர் ஆராய்ந்து அறிந்து வைத்திருந்த உடல் கூறியியல் அமைப்புகளை வைத்து மேலும் அதனுடன் தான் சேகரித்து வைத்து இருந்த பல தகவல்களை சேர்த்து ஒரு நூலை லத்தீன் மொழியில் அவர் எழுதினார், அந்த புத்தகம்தான் “தி ஹ்யூமனி கார்போரிஸ் ஃபேப்ரிகா லிப்ரி செப்டெம்” என்ற பெயரில், 1543-ஆம் ஆண்டு அவர் வெளியிட்டார். அந்த புத்தகத்தில் அவர் மனித உடலை தத்ரூபமாக வடிவமைத்து வரைந்திருந்தது மட்டுமல்லாமல் அதன் முழு அமைப்பையும் அந்த நூலில் விளக்கி இருந்தார்.
அவர் வாழ்ந்த அந்த காலத்தில் மத சட்டமும் மற்றும் அரசாங்கமும் மனித உடலினை அறுத்து பார்ப்பது தண்டனைக்குரியது என்று சட்டம் இயற்றி இருந்தது. அதை யாரேனும் மீறினால் அவர்கள் குற்றவழிகளாக அந்த காலத்தில் கருதபட்டனர், ஏனென்றால் மனிதனை அறுத்து பார்க்கும் உரிமை மனிதனுக்கு இல்லை என்று, நம்பி வாழ்ந்து வந்தனர். ஆனால் வெசாலியஸ் அதை எதிர்த்து துணிச்சலாக மனித பிணங்களை அறுத்து மனித உள் உடலமைப்புகளை கண்டறிந்து இந்த உலகத்திற்கு எடுத்து கூறினார்.
இதை அறிந்த மத குருமார்களும், அவர் பணியாற்றிய கல்லூரி மானவர்களும், வெசாலியஸ் செல்லும் இடம் எல்லாம் அவரை அவமதித்து மிகவும் துன்புறுத்தினர். அதுமட்டும் இல்லாமல் ஸ்பெயின் நீதிமன்றம் இவரை நீதி மன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது. அதில் நீதிபதியின் நேர்நின்ற வேசாலியசுக்கு, மனித உடலை வெட்டி ஆராய்வது குற்றம் என்றும், மேலும் மதத்தின் புனிதத்தையும் மனிதனின் புனிதத்தையும் அவமதித்து விட்டீர்கள் என்றும் நீதிபதி, வெசாலியசுக்கு மரண தண்டனை வழங்கினார்.
ஆனால் ஸ்பெயின் நாட்டு மன்னன் இவர் மீது கொண்டிருந்த மரியதையின் காரணமாக வேசாலியசுக்கு மன்னன் விடுதலை கொடுத்தார். ஆனால் இவர் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆணையிட்ட மன்னன் இவரை ஒரு புண்ணிய தலத்திற்கு நாடு கடத்ததினார், அவ்வாறு நாடுகடத்தப்பட்ட வெசாலியஸ் 1564-ஆம் ஆண்டு 18 ஆண்டுகள் கழித்து மீண்டு தன் நாட்டிற்கு திரும்பி கொண்டு இருந்த அந்நேரத்தில், தான் வந்து கொண்டிருந்த கப்பலில் ஏற்பட்ட பழுதின் காரணமாக கப்பல் உடைந்து அங்கேயே அவர் இறந்தார், அப்பொது அவ்ருக்கு வயது 49 மட்டுமே. பின்பு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு கிரேக்க கரையோரம் உள்ள ஒரு சிறிய தீவில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
அவ்வாறு மனிதனால் உருவாக்க பட்ட மத சட்டங்களை எதிர்த்து மனித உடலை வெட்டி மனிதனின் உள் உடல் கூறுகளை கண்டறிந்தது மட்டும் அல்லாது மனித எலும்புக்கூட்டை முதன் முதலில் உருவாக்கிய மருதுவ மேதைதான், ஆண்ட்ரியாஸ் வெசாலியஸ். இந்த உலகம் இருக்கும்வரை மருத்துவ உலகில் அவர் புகழ் என்றும் நிலையானது.
உங்கள் கவனத்திற்கு: இந்தக் கட்டுரையை நீங்கள் உங்கள் தளங்களில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பகிரலாம், நீங்கள் பகிரும் போது இந்த இணையதளத்தின் இணைப்பை கண்டிப்பாக அந்தப் பக்கத்தில் இணைக்க வேண்டும், இந்த கட்டுரையை புத்தகங்கள், செய்தித் தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பகிரும் முன் அறிவியல்புரத்திலிருந்து முன் அனுமதி பெறவேண்டும், எங்களை தொடர்புகொள்ள: [email protected]
காப்புரிமை © www.ariviyalpuram.com