நடிகர் விஜய் நடிப்பில் “கைதி” திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் “மாஸ்டர்”. இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நடிகர் விஜய் ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் “மாஸ்டர்” திரைப்படமானது ஒரு ஆங்கில ஹாலிவுட் திரைபடத்தின் காப்பி என இணையதளத்தில் பல சர்ச்சைகள் எழுந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒஏறு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் மாஸ்டர் திரைப்படம் எந்த ஒரு ஆங்கில ஹாலிவுட் திரைப்படத்தின் காப்பியும் இல்லை.
அது என்னுடைய சொந்த கதை நான் நேரில் சந்தித்த ஒரு மனிதரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அடங்கிய கதை எனவும் அவர் அறிவித்துள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜின் இந்த பேட்டியின் மூலம் இயக்குனர் லோகோஷின் ரசிகர்களும் மற்றும் நடிகர் விஜய்-யின் ரசிகர்களும் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர் மாஸ்டரின் வரவை எதிர்பார்த்து.