நாம் வாழும் இந்த வையகம் உட்பட எட்டு கிரகங்கள் சூரியனை சுற்றி Saturn and Jupiter வரும் நிலையில், ஒவ்வொன்றும் சூரியனிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தூர தொலைவில் உள்ளது. கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் அதன் தூரத்திற்கு ஏற்றாற்போல சூரியனை சுற்றி வரும் இந்நிலையில், சில கிரகங்கள் நாம் வாழும் பூமியின் கால அளவுப்படி பல வருடங்களையும் எடுத்துக்கொள்கிறது சூரியனை சுற்றி வருவதற்கு.
சூரிய குடும்பத்திலேயே மிகப்பெரிய கிரகமாகஇருப்பது வியாழன் மற்றும் சனி, இந்த கிரகங்களில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் அதிகம் உள்ளது. சனிக்கிரகம் மட்டும் மிகப்பெரிய வளையத்தை தன்னை சுற்றி கொண்டுள்ளது. வியாழன் நான்கு துணைக்கோள்ளைக் கொண்டு சூரியனை சுற்றி வருகிறது.
இதில், சூரியனிடம் இருந்து வியாழன் 5-வது வட்ட பாதையிலும், சனி கிரகமானது 6-வது வட்டப்பதையிலும் இருந்து சூரியனை சுற்றி வருகிறது. மேலும் சூரியனுக்கும் நாம் வாழும் பூமிக்கும் இடையேவுள்ள தூரம் 14 கோடியே 72 இலட்சம் கிலோ மீட்டர் ஆகும். சூரியனை சுற்றிவரும் ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட திசை வேகத்தில் சுற்றி வரும் நிலையில், சில சமயங்களில் சில கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கிறது.
இதனை பூமியில் இருந்து நம் கண்களால் பார்த்தால் நட்சத்திரம் போன்று மிக பிரகாசத்துடன் புலப்படும். இதனைப்போன்றதொரு நிகழ்வு வரும் 21-ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதாவது வியாழன் மற்றும் சனி கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வருகிறது. வியாழன் கிரகமானது சூரியனை ஒருமுறை சுற்றி வர 11.9 வருடங்கள் எடுத்துக்கொள்கிறது. சனிக்கிரகமானது சூரியனை ஒருமுறை சுற்றிவர 29.5 வருடங்கள் எடுத்துக் கொள்கின்றது. இதனை வரும் 21-ஆம் தேதி நம் கண்களால் எந்த ஒரு கருவிகளும் இல்லாமல் பார்க்க இயலும். இரண்டு கிரகத்திற்கும் இடையே 60 கோடி கிலோ மீட்டர் இடைவெளி உள்ளது.
சனி மற்றும் வியாழன் கிரகங்கள் 20 வருடத்திற்கு ஒருமுறை நேர்கோட்டில் சந்திக்கிறது. ஆனால், பூமியில் இருந்து வெவ்வேறு கோணத்தில் இரண்டும் சந்திப்பதால், அதனை நாம் காண்பது அரிதானாக இருக்கிறது. கடைசியாக சென்ற 2000 வருடத்தில் சூரியனுக்கு அருகே இரண்டும் ஒரே நேர்கோட்டில் சந்தித்தது.
மேலும் சென்ற 1623-ஆம் வருடத்தில் இந்த இரண்டு கிரகமும் ஒரே நேர்கோட்டில் பிரகாசமாக காட்சி அளித்தது. அப்போது அந்த இரண்டு கிரகங்களுக்கும் இடையே 0.8 டிகிரி இடைவெளி காணப்பட்டது. அதற்கு முன்னதாக சென்ற 1226-ஆம் வருடத்தில் இந்த இரு கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் பிரகாசமாக தோன்றியது.
கிட்டத்தட்ட தற்போது 800 வருடங்களுக்கு பிறகு இவை இரண்டும் பிரகாசமான வெளிச்சத்துடன் பூமியில் இருந்து பார்க்கும் அளவிற்கு வானில் ஜொலிக்கவுள்ளது. சூரியனுக்கு கிழக்கே 30 டிகிரி கோணத்தில், ( தமிழ்நாட்டில் மாலை 6.30 மணிக்கு இரண்டு கோள்களும் தெரியும். அரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணிநேரம் வரை நாம் அவற்றை காண முடியும்) மாலை நேரம் நாம் நம் வெறும் கண்களால் காணலாம்.
வரும் 20-ஆம் தேதி மற்றும் 22-ஆம் தேதிகளில் இரண்டு கோள்களையும் தனித்தனியே காணலாம். இதனைப்போன்று வரும் 2040-ஆம் வருடம் நவம்பர் மாதம் மற்றும் 2060-ஆம் வருடம் ஏப்ரல் மாதம், 2080-ஆம் வருடம் மார்ச் மாதம், 2100-ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தில் இந்த இரண்டு கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும். ஆனால், இரண்டு வெவ்வேறு கோணத்தில் ஒரே நேர்கோட்டில் சந்திப்பதால் பூமியில் இருந்து பார்க்க நம்மால் இயலாது.
2080-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இரண்டு கோள்களும் சந்திக்கையில், ஓரளவு பிரகாசத்துடன் ஜொலிப்பதைநாம் பார்க்கலாம். சுமார் 800 வருடங்களுக்கு பின்னர் இரண்டு கிரகமும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கபோகிறது. இதன்போது இரண்டு கோள்களுக்கும் இடையே நூலளவு இடைவெளி மட்டுமே அமைந்திருக்கும்.
உங்கள் கவனத்திற்கு: இந்தக் கட்டுரையை நீங்கள் உங்கள் தளங்களில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பகிரலாம், நீங்கள் பகிரும் போது இந்த இணையதளத்தின் இணைப்பை கண்டிப்பாக அந்தப் பக்கத்தில் இணைக்க வேண்டும், இந்த கட்டுரையை புத்தகங்கள், செய்தித் தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பகிரும் முன் அறிவியல்புரத்திலிருந்து முன் அனுமதி பெறவேண்டும்,
எங்களை தொடர்புகொள்ள: [email protected]
காப்புரிமை © www.ariviyalpuram.com