அழகு நிலையம் (Spa) என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரத் தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் டிக்டாக்(TikTok) பிரபலம் சூர்யா உள்ப்பட பதின்மூன்று பெண்கள் அங்கு இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாநகரில் மசாஜ் சென்டர்ஸ்(Massage Centre) என்கிற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரத் தொழிலில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது. இதனடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் கடந்த ஒரு மாதத்தில், பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் அதிலிருந்து மீட்கப்பட்டு , அரசு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், திருச்சி தில்லை நகர், உறையூர், கே.கே.நகர் கன்டோன்மென்ட் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஐந்து (Spa Center) அழகு நிலயங்களில் தனிப்படைக் காவல் அதிகாரிகள் இன்று திடீர் என்று சோதனை நடத்தினார். இதில், திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகே உள்ள நட்சத்திர விடுதியின் மாடியில் அமைந்துள்ள (Sun Spa)சன் ஸ்பா என்ற மசாஜ் சென்டரில் சோதனை செய்தபோது, அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் செய்தது உறுதியானது. மேலும், அந்த ஸ்பா(Spa) சென்டரில், டிக்டாக்(TikTok) பிரபலம் திருப்பூரை சேர்ந்த ரவுடி பேபி சூர்யா உள்ப்பட பல பெண்கள் இருந்ததை கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி உரைந்தனர்.
(Spa)ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததாக, பிரபல டிக்டாக்(TikTok) சூர்யாவை திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள மசாஜ் மையத்தில் உள்ள 15 பேரிடம் காவல் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இதுபோன்று விபச்சாரம் நடக்கிறதா என திருச்சியில் உள்ள ஐந்து மசாஜ் சென்டர்களில் காவல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அதன்பின் மசாஜ் உரிமையாளர்கள் உள்பட எட்டு பேரை கைது செய்தனர் காவல் அதிகாரிகள். மேலும் டிக்டாக்(TikTok) சூர்யா உட்பட 18-பெண்கள் மீட்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தொடர்ந்து விசாரணைக்காக அவர்கள் காவல்நிலையம் அழைத்து செல்ல படவுள்ளனர்.
திருப்பூர் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் டிக்டாக்கில் சூர்யா என்ற பெயரில் மிகவும் பிரபலமானவர். “ரவுடி பேபி சூர்யா” என்ற பெயரை தனக்கு தானே வைத்துக்கொண்ட சூர்யா தற்போது யூ.டியூ.பி-ல் வீடியோ போட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் அரைகுறை ஆடையுடன் அலப்பறை கொடுத்துவந்த சூர்யா தற்போது விபச்சாரம் என்ற புது சர்ச்சையில் காவல் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.