தமிழக விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி மீண்டும் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய நாடு முழுவதிலும் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓ.ஏ.எல்.பி எனப்படும் திறந்தவெளி அனுமதி எனும் நடைமுறை 2015-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எடுக்க கடும் எதிர்ப்பு நிலவும் இந்த சூழலில் ஓ.ஏ.எல்.பி-யின் ஐந்தாவது சுற்றுச்சூழல் ஏலம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார். அப்போது தமிழ்நாட்டின் காவிரி படுகையில் அமைந்துள்ள நிலப்பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்துடன் ஏழு ஒப்பந்தமும், ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் நான்கு ஒப்பந்தங்களும் தற்போது போடப்பட்டுள்ளன.
+1
+1
+1
+1
+1
+1
+1