மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனத்தின் புதிய ஏஎம்ஜி எஸ்63 மாடல் 2021 ஆம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்சமயம் இந்த மாடலின் சோதனை ஓட்டத்தை மெர்சிடிஸ் கார் நிறுவனம் துவக்கி உள்ளது.
முதன் முறையாக புதிய தலைமுறை மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஸ்63 வகை மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. முற்றிலும் மறைக்கப்பட்ட நிலையில் இருந்த போதும், இதன் வெளிப்புற வடிவமைப்பு பற்றிய விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது.
அந்த வகையில் புதிய ஏஎம்ஜி எஸ்63 மாடலில் பானமெரிக்கா கிரில், பெரிய அலாய் வீல் சக்கரங்கள், குவாட்-டிப் எக்சாஸ்ட் உள்ளிட்டவை அதில் வழங்கப்படுகிறது. காரின் உள்புறம் பற்றி அதிக விவரங்கள் தற்போது இல்லை. எனினும், இது பெரும்பாலும் கார்பன் பைபர் மற்றும் அல்கான்ட்ரா எலிமென்ட்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஸ்63 மாடலில் 4.0 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்படலாம். அத்துடன் முதல்முறையாக எலெக்ட்ரிக் மோட்டார் வளங்கப்படலாம் என தெரிகிறது. இந்த யூனிட் 700 பிஹெச்பி திறனை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.