வடகிழக்குப் பருவமழை நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியதிலிருந்து சென்னை மாநகர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக முக்கிய சாலை சந்திப்புகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அண்ணா சாலை சந்திப்பிலிருந்து திருவிக சாலை வரை தண்ணீர் இடுப்பளவிற்கு தேங்கியுள்ளது. தியாகராய நகர், பசுல்லா சாலையிலும் தண்ணீர் அதிகளவு தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
தண்ணீரில் சென்ற ஆட்டோக்களை மீண்டும் இயக்க முடியாமல் ஆட்டோ ஒட்டுநர்கள் மிகவும் அவதிப்பட்டனர். தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும், காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள சென்னை மாநகராட்சி, தற்போது பெய்த மழையால் பத்து இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதாகவும்,ஆறு சென்டி மீட்டருக்கும் மேல் கனமழை பெய்யும் போது குறைந்தது இரண்டு மணி நேரம் தண்ணீர் நின்று செல்லும் எனவும் அதற்கு விளக்கமளித்துள்ளது. இதனிடையே அடுத்து வரும் 24 மணிநேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் பல்வாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர் ஆகிய இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் சிரமப்படுவதாக வாகன ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். குண்டும் குழியுமான சாலைகளில் தேங்கி உள்ள மழைநீரில் செல்ல வேண்டிய அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக மிகவும் வேதனை தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை முன்னெசரிக்கையாக சாலைகளை சீரமைக்காதே இதுபோன்ற சாலைகளால் விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
வட கிழக்கு பருவமழை காலகட்டத்தில் வட கிழக்கு திசையில் இருந்து காற்றின் சாதக போக்கு, நிலப்பரப்பை நோக்கி வீசுகிறது, அப்போது மழை ஏற்படுவது இயல்பு. தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சென்ற மூன்று நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியிருந்தது, அதன் காரணமாக கடலுக்குள் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வந்தது. நேற்று வட கிழக்கு பருவமழை தொடங்கிய இன்நிலையில் நேற்று இரவு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களை நோக்கி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்ந்துள்ளதின் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் கடலை ஒட்டியுள்ள பல்வேறு இடங்களில் பரவலாக மிக கனமழை பதிவாகியுள்ளது என்றும், அதேபோல் அதிகப்படியான ஈரப்பதம், காற்றில் நிலவி வருவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 comment
Great post and straight to the point. I am not sure if this is truly the best place to ask but do you guys have any thoughts on where to hire some professional writers? Thanks 🙂