தமிழக தலைநகர் சென்னையில் விற்கக்கூடிய தண்ணீர் கேன்கள், பாட்டில்கள் ஆகியவற்றில் 187 மாதிரிகளை சென்னை மாநகராட்சி ஆய்வுக்காக அனுப்பி இருந்தது.
சேகரிக்கப்பட்ட 187 மாதிரிகளில் 40 மாதிரிகள் குடிப்பதற்கு தரமற்ற தண்ணீர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எஞ்சியுள்ள 147 குடிநீர் மாதிரிகளில் 30-ல் வைரஸ், பாக்டீரியா போன்ற பரவல் இருப்பதும், 20 மாதிரிகள் போலியான நிறுவனங்களின் பெயர் மற்றும் அச்சுடன் விற்கப்படுவதும் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற தரமற்ற நீரை குடிப்பதால் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் நோய்களான காலரா, டைஃபாய்டு போன்ற பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ள நிலையில், மக்கள் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி அதனுடன் நோய்களையும் சேர்த்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இலவசமாக கிடைக்கக்கூடிய குடிநீர் மூலம் இத்தனை நோய் பாதிப்பு ஏற்படாது என்பதும் தெரியவந்துள்ளது. எனவே சென்னையில் விற்கபடுகின்ற கேன் தண்ணீரில் 50% மனிதர்கள் குடிப்பதற்கு தரமற்றவை என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.