தான் கண்டுபிடித்த அறிவியல் கண்டுபிடிப்பை வெளியிட பயந்து வாழ்ந்தவர். கடைசியாக அறிவியல்தான் உண்மை அதுதான் மிக பெரியது என்னும் நிலைக்கு வந்தார். ஆம் அவர் அவருடைய 37 ஆண்டுகால அறிவியல் கண்டுபிடிப்பை புத்தகமாக வெளியிட தன்னை தைரியப்படுத்திக் கொண்டார் ஆம் அவர்தான் நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ்.
அவருக்கு முன் இருந்த வானவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து சொல்லிய தவறான கருத்துக்களை இவருடைய கண்டுபிடிப்பு தவிடுபொடியாக்கியது. நவீன வானவியல் மறு உருவம் பெருவதிறக்கு காரண கர்த்தவாக இருந்தார். இதனால்தான் இவரை, பின் வந்த அறிவியல் ஆய்வாளர்கள், நவீன அறிவியலின் தந்தை என்று அழைத்தனர்.
இவர் எங்கு பிறந்தார் என்றால் போலந்து நாட்டில் உள்ள தார்ன் என்னும் நகரில் 1473 ஆம் ஆண்டு 19ஆம் தியதி பெப்ரவரி மாதத்தில் பிறந்துள்ளார். இவர் தத்துவம், மருத்துவம், சட்டம் மற்றும் கணிதம் பயின்று டக்டர் பட்டம் பெறுள்ளார். அதன் பிறகு அவர் அவருடைய 33 வது வயதில் துறவரம் பூண்டு பிராயன்பர்க் மேரி கோவிலில் தான் ஒரு பாதிரியாராக பணிபுரிந்துள்ளார்.
இவருக்கு வானவியலில் அதீத ஆர்வம் இருந்துள்ளது. இரவு வந்தாலே அவருக்கு மிக ஆனந்தம், வேறு எந்த வேலையும் செய்வது இல்லை. வேறு எந்த முக்கிய வேலையானாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டு அவருக்கு பிடித்த வானவியல் அறிவியல் ஆராய்ச்சிக்கு தன்னை தயார் செய்து விடுவார். அந்த ஒருகாலத்தில் இன்று போல் தொலை நோக்கியும் இருந்தது கிடையது. ஆனால் அவர் கைகளில்இருந்த ஒரு சில உபகரணங்களை கொண்டு வானத்தை காண்பார்.
எதையாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்கிற ஆர்வத்தில் இரவில் தூங்காமல் வானத்தையே நோக்கி கொண்டு இருந்து விடுவார். இவர்தான் ரிடபம் மீன் கூட்டத்திலுள்ள புதிய பல உண்மைகளை முதன் முதலில் இந்த உலகுக்கு எடுத்துக் கூறியவர். அந்த கால பல்கலைக்கழகங்கள், வானவியல் சம்மந்தமான பாடங்களில் பல குழப்பங்களை வைத்து, தெளிவில்லாத சந்தேகம் நிறைந்ததாகவே காணப்பட்டது மேலும் அதை யாரும் மாற்றி விட முடியாது என்றே எண்ணி வந்தனர்.
மேலும் அதில் நாம் வாழும் பூமிதான் இநத அண்ட சராசரங்களுக்கும் நடுவில் உள்ளது என்றும், சூரியன் ,சந்திரன் , சுற்றியுள்ள மற்ற கிரகங்கள் மேலும் விண்மீனகள் ஆகியவை பூமியை சுற்றி வருகின்றது எனற தலாமியின் கூற்றை அரிஸ்டாட்டில் உள்பட பல மத கூறுமார்களும் மற்றும் மக்களும் நம்பி வந்துள்ளனர். ஆனால் மாற்றி யோசித்த கோப்பர்னிக்கஸின் கண்டுபிடிப்போ தலாமியின் கோட்பாட்டுக்கு எதிரானதாக இருந்தது
பூமி ஒரு உருண்டை, கோள வடிவமானது மேலும் இது ஒரு கோள், இப் பேரண்டமானது விரிந்து பரந்தது. அதில் நாம் வாழும் பூமி ஒரு சின்ன கோள்தான், சூரியனை தான் பூமியும் சூரிய நட்சத்திர குடும்பத்தை சார்ந்த மற்ற கோள்களும் சுற்றி வருகின்றன என்ற கோட்பாட்டை முதன் முதலில் கண்டுபிடித்து தலாமியின் கோட்பாட்டை போட்டு உடைத்தார். மேலும் இதை ஒரு புத்தகமாக தொகுத்தார். ஆனால் அதை வெளியிட பயந்தார் ஏன் என்றால் அவரது கோட்பாடு அந்த காலத்தில் இருந்த மத கோட்பாட்டுக்கு எதிராக இருந்தது. எனவே அவர் அந்த புத்தகத்தை வெளியிடவில்லை.
ஆனால் காலம், அவர் மரணப்படுக்கையில் கிடந்த தன்னுடைய 70 தாவது வயதில், தன் வாழ்க்கையை அறிவியலுக்கு அற்பணித்து கண்டுபிடித்து எழுதிய அந்த கண்டுபிடிப்புகள் அடங்கிய “புரட்சியிகளின் விண்மண்டல சூழற்சி” என்ற அந்த புத்தகம் அவரிடம் காண்பிக்க பட்டபோது, அவரை அறியமாலயே அவரது கைகள் பாய்ந்து சென்று அப்புத்தகத்தை வாங்கியது. அவரது கண்கள் புத்தகத்தை நோக்கி திறந்து பார்க்க முயன்ற சமயத்தில் அவர் உயிர் பிரிந்தது, அவரை விட்டு.
ஆம் அவர் கண்டுபிடிப்பைத்தான், நாம் இன்றுவரை பின்பற்றி கொண்டு வாழ்கிறோம். அறிவியல் உண்மையை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்ற உண்மையை இந்த உலகிற்கு தன் வாழக்கையின் மூலம் வெளிப்படுத்தி வாழ்ந்து, 1543 ஆம் ஆண்டு மே 24 ஆம் நாள் இந்த உலகை விட்டு பிரிந்து சென்றார். இறுதியில் அறிவியலே வெற்றிபெரும் என்ற உண்மையை இந்த உலகத்திற்கு உணர்த்தி சென்றார்.
உங்கள் கவனத்திற்கு: இந்தக் கட்டுரையை நீங்கள் உங்கள் தளங்களில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பகிரலாம், நீங்கள் பகிரும் போது இந்த இணையதளத்தின் இணைப்பை கண்டிப்பாக அந்தப் பக்கத்தில் இணைக்க வேண்டும், இந்த கட்டுரையை புத்தகங்கள், செய்தித் தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பகிரும் முன் அறிவியல்புரத்திலிருந்து முன் அனுமதி பெறவேண்டும், எங்களை தொடர்புகொள்ள: [email protected]
காப்புரிமை © www.ariviyalpuram.com