வீனஸ் கிரகம் பூமியின் மிக நெருக்கமான அண்டை கிரகம், இந்த கிரகம் தனது கட்டமைப்பில் கூட பூமி மாதிரியே இருக்கிறது. ஆனால், பூமியை விட சற்று சின்ன கிரகம். மேலும் வீனஸ், சூரியனுக்கு மிக அருகில் உள்ள ஒரு கிரகமாகும்.
சூரியனிலிருந்து இரண்டாவது கிரகமாக வீனஸ் அமைந்திருக்கிறது. அதை அடுத்து மூன்றாவது கிரகமாக நாம் வாழும் பூமி அமைந்திருக்கிறது. தற்போது இந்த கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
வீனஸ் கிரகம் உண்மையில் பூமியின் சகோதரி என்று அழைக்கப்படுகிறது. காரணம் பூமிக்கு சமமான வளிமண்டலத்தை இந்த கிரகம் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கொண்டிருந்திருக்கிறது. இப்பொழுது இந்த கிரகத்தின் நிலை பூமியை விட பல மடங்கு மாறுபாட்டுடன் காணப்படுகிறது. இது 96% க்கும் அதிகமான கார்பன் டை ஆக்சைடுகளைக் கொண்ட, நான்கு பக்கமும் நிலப்பரப்புகளை கொண்டு, அடர்த்தியான வளிமண்டலத்தையும் கொண்டுள்ளது.
வீனஸின் வளிமண்டல அழுத்தம் ஆனது பூமியை விட சுமார் 92 மடங்கு அதிகமாகும். பால்வெளி விண்மீன் அண்டத்தில் அதிக வெப்பத்துடன் இருக்கும் ஒரே கிரகமும் வீனஸ்தான், அடர்த்தியான விஷ வாயுக்கள் அதன் வளிமண்டலத்தில் மூடப்பட்டிருப்பதும் இதற்கு ஒரு காரணம். வீனஸின் மேற்பரப்பு வெப்பநிலை 880 டிகிரி பாரன்ஹீட்டை (471 டிகிரி செல்சியஸ்) கொண்டுள்ளது. இது ஈயத்தை உருக்கும் அளவுக்கு வெப்பத்தை கொண்டுள்ளது.
விஞ்ஞானிகள் தற்போது வீனஸின் கடுமையான அமில மேகங்களில் பாஸ்பைன் என்ற வாயுவைக் கண்டறிந்துள்ளனர். பாஸ்பைனின் இருப்பு, நுண்ணுயிரிகள் பூமியின் அருகில் உள்ள அண்டை கிரகங்களில் வசிக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது, இது பூமிக்கு அப்பாற்பட்ட கிரகத்தில் உயிர்கள் வாழ்கின்றன என்பதற்கு ஒரு அடையாளமாகும். பூமியைவிட்டு வெளியில் இருக்கும் உயிர்களை ஏலியன்கள் என்று அறிவியல் விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
வீனஸில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உண்மையான வாழ்க்கை வடிவங்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் பாஸ்பைன் பின்னணியில் மறைந்திருக்கும் ஒரு மாபெரும் உண்மையைப் போட்டு உடைத்துள்ளனர். இந்த அறிவியல் உண்மையை யாரும் மறுக்கவே இயலாது என்று விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
பூமியில் இருக்கும் பாஸ்பைன் என்பது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட சூழலில் வளரும் பாக்டீரியாக்களால் தயாரிக்கப்படுகிறது என்ற உண்மையை விஞ்ஞானிகள் தற்பொழுது விளக்கியுள்ளனர். வீனஸில் உள்ள பாஸ்பைன் பின்னணியில் நிச்சயம் உயிர்கள் இருக்கக் கூடும் என்று அறிவியல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
சர்வதேச அறிவியல் விஞ்ஞான குழு முதன்முதலில் ஹவாயில் ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் தொலைநோக்கியைப் பயன்படுத்தி வீனஸில் பாஸ்பைனைக் கண்டறிந்து, மேலும் சிலியில் உள்ள அட்டகாமா லார்ஜ் மில்லிமீட்டர் / சப்மில்லிமீட்டர் அரே (ஆள்Mஆ) ரேடியோ தொலைநோக்கியைப் பயன்படுத்தி அதை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த உறுதியான தகவலைப் பார்த்து விஞ்ஞானிகள் அனைவரும் திகைத்துப் போய் மிகவும் ஆச்சரியப்பட்டதாகத் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வேற்று கிரக வாழ்வின் இருப்பு என்பது அறிவியலின் மிக முக்கியமான கேள்விகளில் ஒன்றாகும். விஞ்ஞானிகள் நமது சூரிய மண்டலத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள பிற கிரகங்கள் மற்றும் சந்திரன்களில் “உயிர் அடையாளங்களை”, உயிரின் மறைமுக அறிகுறிகளைத் தேட, ஆய்வுகள் மற்றும் அதனை கவனிக்க தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக தற்பொழுது வீனஸின் தகவல் பிரமிக்கவைக்கிறது.
வீனஸைப் பற்றி தற்போது நாம் அறிந்திருக்கும் பாஸ்பைன் தகவல், உயிர் இருப்பதற்கான மிகவும் நம்பத்தகுந்த விளக்கத்தை வழங்கியுள்ளது. வீனஸில் அதன் வெப்பத்திற்கு ஏற்றார் போல், அங்கு சல்பூரிக் அமிலம் தான் அதிகமாக இருக்கிறது. சல்பூரிக் மழை, சல்பூரிக் நதிகள், சல்பூரிக் கடல் மற்றும் சல்பூரிக் வாயுக்களால் வீனஸ் கிரகம் சூழப்பட்டிருக்கிறது.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியை போல் இருந்த வீனஸ் கிரகம், அதிக வெப்பத்தின் காரணமாக வீனஸ் கிரகத்தில் முன்பு இருந்த நீர் ஆதாரங்கள் காலப்போக்கில் இப்படி அமிலத் தன்மை கொண்டதாய் மாறியிருக்கும் என்றும் அறிவியல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இருப்பினும் இங்கு பாஸ்பைன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, பெரும் பிரமிப்பை உருவாக்கியுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
வீனஸில் உயிர்கள் இருக்கின்றன என்ற இந்த செய்தி வெளியானதில் இருந்து, சமூக ஊடகங்களில் மக்களின் முழூ பேச்சும் வீனஸ் கிரகத்தை பற்றியாகத்தான் இருக்கிறது. இப்படியான அமிலத்தன்மை கொண்ட சூழ்நிலையில் உயிர் அடையாளம் இருக்கிறது என்றால் அது இப்படித்தான் இருக்குமென்று ஏலியன் புகைப்படங்களை மக்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் 2021ல் ஏலியன் பூமிக்கு வரலாம் உஷாராக இருங்கள் என்றும் பீதியைக் கிளப்பி வருகின்றனர்.