சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார்.
2004 ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்த மகேந்திர சிங் தோனி, 2007 ஆம் ஆண்டு தொடங்கி 2016 வரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தார். இவரது தலைமையில், ஐ.சி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று விதமான உலகக்கோப்பைகளையும் (50 ஓவர், 20 ஓவர், சாம்பியன்ஸ் டிராஃபி) இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று கோப்பைகளையும் வென்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமையும் இவரையே சாரும். மேலும், இவர் ஆசிய கோப்பைகளையும் இந்தியாவிற்கு வென்று தந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் தன் திறமையை உலகுக்கு நிரூபித்துள்ளார். இதனால், இந்திய அணி டெஸ்ட் போட்டி தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தது.
இந்த நிலையில் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் எனக்கு ஆதரவு அளித்த இரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.தோனி, இதுவரை 350 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும், 90 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.