ஆண்களைப் போலவே பெண்களுக்கு சொத்துரிமையில் சமபங்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சொத்துக்களை பிரிக்கும் போது ஆண்களைப் போலவே பெண் பிள்ளைகளுக்கும் சமபங்கு வழங்ககோரிய வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இத்தகைய தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரையில் கடந்த 2005-ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்த இந்து வாரிசு உரிமை சட்டத்தில் பெற்றோர்களின் சொத்தில் ஆண்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றிருந்தது. அதே சமயத்தில் 2005-ல் பெற்றோர்களின் சொத்தில் ஆண்களை போலவே பெண்களுக்கும் சமபங்கு உண்டு என்று சட்ட திருத்தும் கொண்டுவரப்பட்டு இயற்றப்பட்டது.
+1
+1
+1
+1
+1
+1
+1