தமிழர்களின் பழம்பெரும் இலக்கியங்களில் ஆங்காகே, அவ்வப்போது வந்து செல்லும் ஒரு வார்த்தை “குமரி”. இது வெறும் இளம் மங்கையரை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. தமிழர்கள் வாழ்ந்த, பிறந்த பூமியை குறிக்கும் சொல்.
இன்று உலக அகழ்வாராய்ச்சியாளர்களால் “லெமுரியா” (lemuriya) என்று அழைக்கப்படும் கண்டம் தான் ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்புக் குமரிக்கண்டம் என்ற பெயருடன் மிக கம்பீரமாய் இருந்து வந்துள்ளது. மூன்று சங்கம் வளர்ந்த இடமும் இதுதான், தமிழிசைப் பாக்களும், இயல், இசை, நாடகமும் என நாகரீகம், கலைகள், வீரம் அனைத்தும் விளைந்த இடம், இந்த குமரிக்கண்டம். தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல, தமிழ் தமிழர்களின் உயிர், அது பெரும் வரலாறு,
ஏறத்தாழ இருபதாயிரம் முதல் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்ததாகக் கூறப்படும் கண்டம், இந்த குமரிக் கண்டம். இங்கு தான் பல உயிரினங்கள் தோன்றியுள்ளன. உலகின் முதல் மனிதர்கள் தோன்றிய இடமும் இது தான். மனிதன் இவ்வாறு தான் வாழ வேண்டும், குடும்பத்திற்கு என்று ஓர் இலக்கணம், உறவுகள், பந்தம், பாசம் என நாகரீக வளர்ச்சிக் கண்டெடுக்கப்பட்ட இடமும் இந்த குமரிக் கண்டம் தான்.
அனைத்து விலங்குகளைப் போல வினோத ஓலிகளை எழுப்பியவாறுத் அலைந்துக் கொண்டிருந்த சமயத்தில் மனிதனுக்கு என்று ஓர் மொழிப் பிறந்த இடம் தான் குமரிக்கண்டம். முதல் மனிதன், தான் தோன்றிய இடமான குமரிகண்டத்தில் பேசிய மொழி “தமிழ்”. உலகிலேயே பழமையான மொழி மட்டுமல்லாமல், தொன்மை வாய்ந்த மொழியும் தமிழ் தான் என்பது உலகறிந்த உண்மை.
மூன்று சங்கங்கள் வளர்க்கப்பட்ட இடம் தேனிக்கு அருகாமையில் இருக்கும் மதுரை அல்ல. குமரிக்கண்டத்தின் மிக முக்கியமான தலைநகராக திகழ்ந்துக் கொண்டிருந்த மாபெரும் நகர் “மதுரை”. அந்த மதுரை மாநகரத்தில் தான் தமிழ்முச்சங்கம் வளர்த்து வளர்க்கப்பட்டதாகக் நம்பப்படுகிறது. இடப்பக்கம் ஆப்ரிக்கா, வலப்பக்கம் ஆஸ்திரேலியா, மேல்பக்கம் ஆசிய போன்ற கண்டங்களை ஒருங்கே இணைத்து வைத்திருந்த கண்டம்தான் குமரிக்கண்டம்.
தற்போது இருக்கும் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரம் எல்லாம், குமரிக் கண்டத்தில் இருந்த மலைகளுக்கு முன் வெறும் குன்று தான். எவரெஸ்ட் போல பத்து மடங்கு பெரிய மலைகள், வானுயர் அருவிகள், ஆறுகள் என கனவுகளுக்கும், கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டு இருந்த கண்டம் குமரிக்கண்டம். கட்டிடம், மருத்துவம், புவியியல், வானியல் என்று பல துறைகளிலும் உயர் தொழில்நுட்பத்தை அப்போது குமரிக்கண்டத்தில் இருந்து வாழ்ந்து வந்த தமிழர்கள் செயல்படுத்தியுள்ளனர். மேலும் அடுத்தடுத்து ஏற்பட்ட பேரழிவுகளினால் இந்திய பெருங்கடலில் மூழ்கியது குமரிக்கண்டம்.
பேரழிவுகளுக்கு பின்பு முத்திசைகளிலும் அங்கு வாழ்ந்த மனிதர்கள் பிழவுபட்டு உலகம் முழுக்க சென்று பரவி வாழ வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. இதற்கு, தெற்கு-ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா நாட்டு மக்களின் உடல் அமப்புகள் மற்றும் எலும்பு கூடு அமைப்புகள் பெரும்பாலும் தமிழர்கள் மாதிரி இருப்பது ஒரு பெரும் சான்றாக இருக்கிறது. சென்ற பத்து வருடங்களாக பல ஆய்வுகள் குமரிக்கண்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான ஆய்வறிக்கைகள், மூழ்கிய நிலையில் உள்ள கட்டிடங்களில் வடிக்கப்பட்டுள்ள வார்த்தைகள் தமிழ் மொழியொடு ஒத்துப்போவதாக உறுதிபடுதியுள்ளனர்.