“முகலூல் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் அமெரிக்கன் டாலர்களை தாண்டியுள்ளது“
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் அதிகளவில் வீடுகளில் முடங்கியுள்ளதால் அதிகமாக இணையதளத்தில் பொழுதைக் கழித்து வருகின்றனர். இதனால் இணையதள நிறுவனங்களின் வருவாய் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது.
அந்த வரிசையில் முகநூல் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 22 பில்லியன் டாலர் அதிகமாகி 100 பில்லியன் அமெரிக்கன் டாலர்களை எட்டியுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் சென்டிபில்லியனர்கள் பட்டியலில் ஜெப் பெசோஸ் மற்றும் பில்கேட்ஸ் ஆகியோருடன் மார்க் ஜூக்கர்பெர்க்கும் சேர்ந்துள்ளார்.
+1
+1
+1
+1
+1
+1
+1