இரண்டு சக்கர வாகனங்கள் அல்லது புதிய நான்கு சக்கர வாகனங்கள் வாங்கினால் குறைந்தது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரைக்கான இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்ற விதி திரும்ப பெறப்பட்டுள்ளதால், இனி செலவுகள் குறையும்.
இந்த விதியை மாற்றி முன்னால் இருந்தது போன்று ஓராண்டிற்கு மட்டும் இன்சூரன்ஸ் எடுத்தால் போதும் என்று ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது. புதிதாக வாகனம் வாங்கியவர்கள் விரும்பினால் கூட நீண்ட கால இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுக்க முடியாது. இந்த ஓராண்டு பாலிசி என்பது வாகன உரிமையாளர்களுக்கு வழங்கிய முழுமையான காப்பீட்டுக்கானது ஆகும்.
மூன்றாம் நபர்க்கு காப்பீடு தேவை என்றால், மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கான பாலிசி கட்டாயம் எடுக்க வேண்டும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த புதிய மாற்றத்தால் வரும் ஆகஸ்ட் மாதம் 1 -ஆம் தேதி முதல் புதிதாக வாகனம் வாங்குபவர்களுக்கு ஆன்ரோடு விலை மலியும் என்று வகன ஓட்டிகளால் எதிர்பார்க்கப்படுகிறது.