இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சாலை வீதியோரத்தில் தள்ளு வண்டிக் கடையில் முட்டைகள் விற்றுக்கொண்டிருந்த பதினான்கு வயதுச் சிறுவனிடம், அந்தபகுதி மாநகராட்சி அதிகாரிகள் ஒரு 100 ரூபாய் இலஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அந்தச் சிறுவன் இன்னும் போணி ஆகாததால் தன்னிடம் அந்தளவு பணம் இல்லை என்று தெரிவித்துள்ளான். அதன்பிறகும் அவனை விடாத அவர்கள், பணம் தரவில்லை என்றால் நாளை முதல் இந்த பகுதியில் நீ கடை நடத்த முடியாது என தீவிரமாக மிரடியுள்ளனர்.
கொரோனா வைரஸ் நோய் ஊரடங்கில் வியாபாரம் குறைவாகத்தான் போகிறது அதிலும் நீங்கள் வந்து பங்கு கேட்டால் நான் என்ன செய்வது என அந்தச் சிறுவன் கேட்டதற்கு, கோபமடைந்த அதிகாரிகள் அவனின் வண்டியைக் அடித்து கீழே கவிழ்த்து அனைத்து முட்டைகளையும் உடைத்துள்ளனர்.
இந்த வீடியோ இபோது சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. அதில் வெள்ளை நிற உடையணிந்திருந்த பெயர் தெரியாத சிறுவன், அதிகாரிகளை நோக்கி ஏதோ ஏசுவது போல் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதை குறித்து காவல் அதிகாரிகளை காங்கிரஸ் எம்.எல்.ஏ சஞ்சய் குக்லா கடுமையாகக் கண்டித்துள்ளார்.