டிஸ்கவரி ஃப்ளஸில் கொரோனாவுக்கான இந்தியாவின் போர் என்ற ஆவணப்படத்தில் பேசிய மைக்ரோசாஃப்ட் நிறுவனரும் உலகின் பெரும் கோடிசுவரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் கூறியதாவது
இந்தியாவும் அதன் மிகப்பெரிய மக்கள் தொகை அடர்த்தியும் மற்றும் நகர்ப்புற மையங்களால் சுகாதார நெருக்கடியால் இந்தியா பெரும் சவாலை எதிர்கொள்கிறது.
சாவு விகிதத்தை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால்தான் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த முடியும்.
இந்தியாவில் அதிக மிக முக்கியமான விஷயங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தியவின் மருந்தகத் தொழில் கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கத்திற்கு மற்ற நோய்களுக்கு அவர்கள் பயன்படுத்திய பிற பெரிய திறன்களை பயன்படுத்துகிறார்கள்
எனது அறக்கட்டளை மூலம் இந்திய அரசுடன் இணைந்து உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.
மருத்துவ ஊழியர்களுக்கு ஆன் லைன் மூலம் பயிற்சி அளித்து வருகிறோம். இந்திய மருந்து நிறுவனங்களால் ஒட்டுமொத்த உலகிற்கே தடுப்பூசிகளை தயாரிக்க முடியும்.
இந்தியாவின் மருந்தியல் துறையில் அதிக திறன் உள்ளது – சீரம் நிறுவனம் தொடங்கி, பல தடுப்பூசி நிறுவனங்கள் முழு உலகிற்கும் இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு அதிகமான தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும்.
தடுப்பூசி நிலையங்களை உருவாக்க உலகளாவிய அடிப்படையில் செயல்படும் தொற்றுநோய் தயாரிப்பு கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணியில் இந்தியா இணைந்து உள்ளது என அவர் அதில் கூறியுள்ளார்.