உலக பணக்காரர்கள் பட்டியலில் வாரன் பஃபட்டை பின்னுக்கு தள்ளி முகேஷ் அம்பானி எட்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவில் கடந்த இரண்டு மாதங்களாக உலகின் பிரபல பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன.
பிரபல இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவில் கடந்த இரண்டு மாதமாக உலகின் பல்வேறு பிரபல நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. சென்ற வருடம் ஏப்ரல் 22-ம் தேதி முதல் ஜியோவில் 12 நிறுவனங்கள் மொத்தமாக 1,17,588.45 கோடி ரூபாய் முதலீடு செய்து 25.09 சதவீதம் பங்குகளை வாங்கியது. இதனையடுத்து ரிலையன்ஸ் குழுமம், நிகர கடன் இல்லாத நிலையை அடைந்து விட்டதாக முகேஷ் அம்பானி அரிவித்துள்ளார்.
இந்த வருடம் மார்ச் 31, 2020-க்குள் இந்த நிலையை அடைய வேண்டும் என திட்ட தீட்டியிருந்த நிலையில், முன்னதாகவே இலக்கை அடைந்ததன் மூலம் பங்குதாரர்களுக்கு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் முகேஷ் அம்பானி இடம்பிடித்திருந்தார். கொரோனா பாதிப்பால் பல நிறுவனங்கள் அடியை சந்தித்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோவில் மட்டும் முதலீடுகள் குவிந்தன. இந்நிலையில் புளூம்பெர்க் வெளியிட்டுள்ள பணக்காரர்களின் பட்டியலில், முகேஷ் அம்பானி 68.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 8-வது இடத்தை பிடித்துள்ளார். 67.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் வாரன் பஃபெட் ஒன்பதாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
வாரன் பஃபெட் சுமார் 2.9 பில்லியன் டாலர்களை, தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியதால் அவரது சொத்து மதிப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.