விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் குறித்த ஆர்வத்தை தூண்டும் விதமாக, ஆன்லைன் முறையில் இலவச சான்றிதழ் படிப்பை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) அறிவித்துள்ளது.
விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த கண்ணோட்டம் என்ற தலைப்பில் விண்வெளி குறித்த பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு கற்றுத்தரும் விதமாக இஸ்ரோ, புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இதில் 10 வயதுக்கு மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பள்ளி மாணவர்கள் என யார் வேண்டுமானாலும் சேரலாம். எம்.ஓ.ஓ.சி.,யின் ஒரு பகுதியாக ஐ.ஐ.ஆர்.எஸ் மூலம் ஆன்லைன் வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சேர விரும்பும் மாணவர்கள், ஐ.ஐ.ஆர்.எஸ் (IIRS) இணையதளத்தில் (https://isat.iirs.gov.in/specialcourse/aboutmooc.php) சென்று, முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மாணவர்களின் மின்னஞ்சலுக்கு ஆன்லைன் வகுப்புக்கான லிங்க் அனுப்பி வைக்கப்படும். அதன் வழியே வகுப்புகளில் பங்கேற்கலாம்.
வரும் ஜூன் 6ல் துவங்கி ஜூலை 5 வரை ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறுகிறது. 10 மணி நேர படிப்பில், ஆன்லைன் வாயிலாக ஆங்கில மொழியில் வீடியோ ஒளிப்பரப்பப்படும். எத்தனை முறை வேண்டுமானாலும் வீடியோவை மாணவர்கள் பார்த்து கொள்ளலாம். வீடியோ பார்த்த பின்னர், மாணவர்கள், அது தொடர்பாக கேட்கப்படும் வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். நாட்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளால் இந்த படிப்பு நடத்தப்படுகிறது.
70 சதவீத வருகைப்பதிவுடன், 60 விழுக்காடு மதிப்பெண் பெறும் அனைத்து மாணவர்களுக்கும், இஸ்ரோ, ஐ.ஐ.ஆர்.எஸ் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.
Indian Space Research Organization (ISRO) Announces Free Certificate Course Online !!!
The Indian Space Research Organization (ISRO) has announced a free online certification course to stimulate interest in space science and technology.
ISRO has introduced a new course titled ‘Overview of Space Science and Technology’ to teach students various information about space. Anyone over the age of 10 can join as a local or foreign school student. It is planned to conduct online classes through IIRS as part of MOOC. Students wishing to enroll should go to the IIRS website (https://isat.iirs.gov.in/specialcourse/aboutmooc.php) and register first. A link to the online class will be sent to students’ emails. That way you can participate in classes.
Classes will be held online from June 6 until July 5. During the 10 hour course, the video will be broadcast online in English. Students can watch the video as many times as they want. After watching the video, students should answer the questions asked about it. The study is being conducted by some of the best scientists in the country.
Certificates will be awarded on behalf of ISRO and IIRS to all students who score 60 per cent with 70 per cent attendance.