
அஜித்தை(Thala Ajith) பார்த்தால் பெருமையாக இருக்கிறது என இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார். பாகுபலி, பாகுபலி 2 திரை படங்களின் இயக்குனர் ராஜமவுலி, தற்போது RRR படத்தை இயக்கி அதனை முடித்துவிட்டார்.
இந்த படம் தற்போது திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் ராஜமவுலி கலந்துகொண்டார். அப்போது அவரிடம் எந்த நடிகரை பார்த்து நீங்கள் பெருமைப்படுகிறீர்கள் என நிருபர்களால் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “சமீபத்தில் நடிகர் அஜித்தின் நடவடிக்கையால் நான் பெருமைப்படுகிறேன். தன்னை தல என அழைக்க வேண்டாம் என அவரது ரசிகர்களுக்கு அவர் கட்டளை போட்டிருக்கிறார். நடிகர்கள் பலரும் தலைவராக ஆசைப்படும்போது, அந்த வார்த்தை தனக்கு வேண்டாம் என ஒரு நடிகர் சொல்வது பெரிய விஷயம். அதனால் அஜித்தை நான் பாராட்டுகிறேன்” என்றார் ராஜமவுலி. அவரது இந்த கருத்தை நடிகர் அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.