சொத்து வில்லங்க (EC – Encumbrance Certificate) சான்றில் உள்ள விபரங்களில் திருத்தங்கள் செய்ய, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம் என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதிநிர்மலா சாமி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பதிவுத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த, பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, 1975ம் ஆண்டு முதல், தற்போது வரையிலான காலத்திற்கான, வில்லங்க சான்றுகள், விரைவுக் குறியீடு மற்றும் சார் – பதிவாளரின் மின் கையொப்பமிட்டு, ஆன்லைன் வழியே வழங்கப்படுகின்றன.
ஆவணத்தில் உள்ள விபரத்திற்கும், வில்லங்க சான்றில் உள்ள விபரத்திற்கும் இடையே மாறுபாடுகள் இருந்தால், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட சார் – பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று, உரிய சான்றுகளுடன் விண்ணப்பம் அளிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதனால், பொதுமக்களுக்கு காலவிரயம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, வில்லங்க சான்றில் உள்ள விபரங்களில் திருத்தங்கள் செய்ய, ஆன்லைன் வழி விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு பதிவுத்துறையின் tnreginet.gov.in என்ற இணையதளத்தில், அட்டவணை தரவு திருத்தம் என்ற தெரிவின் வழி சென்று, பொதுமக்கள் ஆனலைன் வழியே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே பெறப்பட்டு, சார் – பதிவாளரால் சரி பார்க்கப்பட்டு, மாவட்டப் பதிவாளரின் ஒப்புதலுடன், உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
You can apply online to amend the EC – Encumbrance Certificate !!!
Jyoti Nirmala Sami, Secretary, Commercial Taxes and Registration, said that one can apply online to make corrections in the details of the property (EC – Encumbrance Certificate).
In a press release issued by him, several reform measures are being taken to improve the functioning of the registry. Currently, Encumbrance certificate for the period from 1975 to the present are issued online with the quick code and the e-signature of the registrar.
If there is a discrepancy between the details in the document and the details in the Encumbrance certificate, it is the practice of the public to go to the concerned Char-Registrar’s offices and apply with the relevant evidence. Thus, it is a waste of time for the public. To avoid this, a new procedure for applying online has been introduced to make corrections to the details in the Encumbrance Certificate.
For this, the public can apply online by going to the Registrar’s website at tnreginet.gov.in and selecting Schedule Data Correction. Applications will be received online, checked by the Registrar, and with the approval of the District Registrar, appropriate corrections will be made. Thus he said.