ரஜினி மக்கள் Actor Rajini மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று நடிகர் ரஜினி அறிவித்துள்ளார். மேலும், வருங்காலத்திலும் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வரும்காலத்திலும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக ரசிக பெருமக்களுக்கும் வணக்கம்.
நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இரக்கிறது. அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை. நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.
கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் தனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழ் நாடு வாழ், நடிகர் ரஜினி அறிவித்துள்ளார்.
Actor Rajini People’s Forum dissolved !!!
Actor Rajini has announced that he will dissolve the Rajini People’s Forum and function as a Rajinikanth fan charity forum without any pro teams. Also, actor Rajinikanth has categorically stated that he will not be involved in politics in the future.
The timing did not make what we thought possible. He has no intention of getting involved in politics in the future. In his statement, he said, “Greetings to the Rajini People’s Forum administrators, members and the Tamil fans who are the gods who made me live.
After I said I could not come to politics, what was the mission of the Rajini People’s Forum? What is the status? That is questionable among people’s forum administrators and fans. It is my duty to explain it. I started a political party and got involved in politics.
The timing did not make what we thought possible. He has no intention of getting involved in politics in the future. Therefore, I would like to inform you that the Rajinikanth People’s Forum will be dissolved and Rajinikanth will continue to function as a fan charity for the benefit of the people with the secretaries, associate, deputy secretaries and executive committee members of the Rajini People’s Forum for the time being.