அமெரிக்காவின் புளோரிடா குடியிருப்பு வளாகம் இடிந்து (102 people died in the collapse of a residential building in the United States) விழுந்ததில் 102 பேர் இறந்தனர், பலரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
தென்கிழக்கு அமெரிக்க மாகாணம் புளோரிடாவில் உள்ள மியாமி-டேட் கவுண்டியில் வியாழக்கிழமை அதிகாலை 12 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென சீட்டுக்கட்டு போன்று இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இந்த சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கிய 12 வயது சிறுவன் உள்பட 35-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம், பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மியாமி தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு உதவித் தலைவர் ரைடு ஜடல்லா தெரிவித்தார்.
சம்பவம் நடந்தபோது கட்டிடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. காணாமல் போனவர்களை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் முழுமையடைந்த பின்னரே உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர், சேதம் குறித்த சரியான தகவல் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
1981 -ஆம் ஆண்டு மியாமி கடற்கரைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ள கடற்கரை நகரமான சர்ப்ஸைடில் கட்டப்பட்ட 136 குடியிருப்புகள் கொண்ட 12 மாடி சாம்ப்லைன் டவர்ஸ் உள்ளூர்நேரப்படி அதிகாலை 1.50 மணியளவில் சீட்டுக்கட்டு போன்று இடிந்து சரிந்தது. குடியிருப்பின் வடகிழக்கு பகுதியில் உள்ள சுமார் 55 குடியிருப்புகள் இடிந்து சரிந்துள்ளது. கடற்கரை அருகே அழகாக அமைந்திருந்த குடியிருப்பு வளாகம் இடிந்து சரிந்தது அனைவரையும் ஆச்சரியத்திலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
102 people died in the collapse of a residential building in the United States: rescue work is intense!!!
At least 102 people have been killed and dozens more are missing after a Florida residential complex collapsed in the United States. A 12-story apartment building suddenly collapsed like a deck of cards early Thursday morning in Miami-Date County, Florida, in the southeastern United States. Thus smoke was seen all over the area.
More than 35 people have been rescued, including a 12-year-old boy trapped in the rubble, and more than 100 may have been killed and many more injured, said Ryd Jadalla, assistant head of the Miami Fire and Rescue Team, who said the condition of many of them was worrying.
It is not clear how many people were in the building at the time of the incident. Authorities said they could not confirm the missing. Rescue operations are being intensified and ongoing. It is learned that the exact details of the casualties will be released only after the rescue operations are completed.
The 136-story 12-story Sampline Towers, built in 1981 in the coastal town of Surface, 6 miles north of Miami Beach, collapsed at 1.50am local time. About 55 apartments in the northeastern part of the apartment complex have collapsed. The collapse of the beautiful residential complex near the beach has taken everyone by surprise and pain.