இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் உருமாற்றம் கொரோனா வைரஸ் பரவல் தற்போது அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா 2-வது அலையின் போது உருமாற்றம் அடைந்த, ‘டெல்டா’ வகை வைரஸ், மிக வேகமாக பரவியது. இந்த வைரஸ், டெல்டா பிளஸ் அல்லது ஏஒய்.01 என்ற வைரசாக மேலும் உருமாற்றம் அடைந்து, 3-வது அலையை உருவாக்கும் என, ஆய்வாளர்கள் சமீபத்தில் தெரிவித்தனர். இந்நிலையில் மராட்டிய மாநிலம், மத்திய பிரதேசம், கேரளா மற்றும் கர்நாடகாவில், இந்த புதிய வகை, “டெல்டா பிளஸ்” வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
உலக அளவில், 200 பேர் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதில் நம் நாட்டில், 30 பேர் உள்ளனர். நம் நாட்டில் முதல் டெல்டா பிளஸ் வகை வைரஸ், மத்திய பிரதேசத்தின் போபாலில் கண்டறியப்பட்டது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட, 64 வயது பெண்ணுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. வீட்டில் சிகிச்சை பெற்ற அவர் தற்போது குணமடைந்துவிட்டார். மேலும் நான்கு பேரில் ஒருவர் மட்டும் உயிரிழந்தார். மராட்டியத்தில் 21 பேருக்கும், கேரளாவில் மூன்று பேருக்கும், கர்நாடகாவில் இரண்டு பேருக்கும் டெல்டா பிளஸ் வகை கண்டறியப்பட்டுள்ளஹ்டு குறிப்பிடத்தக்கது.
Detection of “Delta Plus” type corona virus in India!!!
As the corona infection has been declining in India for the past few days, curfew relaxations have been announced in various states. Vaccination activities are currently being intensified. According to the Department of Health, the spread of the corona virus is currently on the rise.
Mutated during the 2nd wave of the corona, the ‘delta’ type virus spread very fast. The virus could further transform into a virus called Delta Plus or AY.01, creating a 3rd wave, researchers said recently. The new type, ‘Delta Plus’ virus, has been detected in the Maratha state, Madhya Pradesh, Kerala and Karnataka.
Worldwide, more than 200 people have been diagnosed with the Delta Plus virus. In our country, there are 30 of them. The first Delta Plus virus in our country was detected in Bhopal, Madhya Pradesh. A 64-year-old woman who was vaccinated with two doses was infected with the virus. He was treated at home and is currently recovering. And only one in four died. Delta Plus has been detected in 21 people in Marathaland, three in Kerala and two in Karnataka.