கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் அதிவேகமாக உதவ நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களிடம் கூறியபோது: கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ரெம்டெசிவிா் மற்றும் இதர மருந்துகள் உள்பட இந்தியாவுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பூசி உற்பத்திக்கான சாதனங்களும் அந்நாட்டுக்கு அனுப்பப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு எப்போது தடுப்பூசிகளை அனுப்ப முடியும் என்பது குறித்து இந்திய பிரதமா் மோடியிடம் பேசியபோது தெரிவித்தேன்.
கடந்த ஆண்டு கொரோனா பிரச்னையில் அமெரிக்கா சிக்கியிருந்தபோது எங்களுக்கு இந்தியா உதவிபுரிந்தது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன் (அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தபோது அந்நாட்டுக்கு கொரோனா சிகிச்சைக்காக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அனுப்ப ஏதுவாக அந்த மருந்தை ஏற்றுமதி செய்வதற்கான தடையை இந்தியா நீக்கியதை குறிப்பட்டாா்).
கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் அந்நாட்டுக்கு அதிவேகமாக உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நோவாவாக்ஸ் உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து இருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. அதுதான் தற்போதைய பிரச்னையாக உள்ளது. தடுப்பூசிகளை பகிா்ந்து கொள்ளும் நிலைக்கு அமெரிக்கா வரும். அதேவேளையில் தடுப்பூசி தேவைப்படும் நாடுகளுடன் எவ்வாறு அதனை பகிா்ந்துகொள்வது என்பதையும் அமெரிக்கா அறிய வேண்டியுள்ளது என்று தெரிவித்தாா்.
கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கான மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை நீக்க இந்தியாவின் சீரம் நிறுவனம் கோரிக்கை விடுத்தது. எனினும் அதற்கு அமெரிக்கா செவிசாய்க்காததால் பைடன் அரசுக்கு எதிராக அந்நாட்டில் பலத்த கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, தடுப்பூசி உற்பத்தி மூலப்பொருள்கள், கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை அளித்து இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா முன்வந்துள்ளது.
US President Joe Biden – Action to help India expedite
US President Joe Biden has said he is stepping up efforts to help India’s fight against Corona.
He told reporters at the White House that steps have been taken to provide India with all the assistance it needs immediately, including Remdecivo and other drugs needed to treat corona. Vaccine production equipment is also shipped to the country. When I spoke to Indian Prime Minister Modi about when vaccines can be sent to India from the United States.
I would also like to mention that India helped us when the United States was in trouble with the corona last year (noting that India lifted the ban on the export of hydroxy chloroquine for corona treatment when US President Donald Trump was in office). Steps have been taken to help India in its struggle against Corona.
Vaccines, including novovax, have to be used in the United States to ensure their availability. That is the current problem. The United States will come to the point of sharing vaccines. At the same time, he said, the United States needs to know how to share the vaccine with countries in need.
Exports of raw materials for corona vaccine production were banned in the United States. India’s Serum Company has demanded that the ban be lifted. However, the United States did not listen, and there were strong protests in the country against the Biden government. Following this, the United States has offered to help India by providing vaccine-producing raw materials, coronavirus drugs, and oxygen.