இந்தியாவில் அதிவேக இணையம்? போட்டி களத்தில் எலான் மஸ்க், கூகுள் மற்றும் ஏர்டெல்?
இந்தத் திட்டத்தின் மூலம் 1 GBPS வரை அதிவேக இணையச் சேவையை வழங்க முடிவு செய்துள்ளது எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க். எலான் மஸ்க்கின் (Elon Musk) செயற்கைக் கோள் வழி இணையச் சேவைத் திட்டமான ஸ்டார்லிங்க் இந்தியாவில் 2022-ல் கிடைக்கும் என அதன் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே இந்த சேவை கிடைக்கும் எனவும், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை எனவும் அந்தப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்ன, விலைதான் கொஞ்சம் அதிகம். 99 அமெரிக்க டாலர்களை வைப்பு நிதியாகச் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 7000 ரூபாய்.
இந்தத் திட்டத்தின் மூலம் நொடிக்கு 1 GB வரை அதிவேக இணையச் சேவையை அந்த நிறுவனம் வழங்க முடிவு செய்துள்ளது. தற்போது சோதனையில் இருக்கும் இந்தத் திட்டம், 2021-ன் பாதியில் அல்லது இறுதியில் ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, நியூஸிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்குப் பயன்பாட்டிற்கு வரும். இந்தியப் பயனர்கள் முன்பதிவு செய்ய, அதன் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் சென்று பதிவு செய்யலாம்.
இந்தியாவில் அதிவேக இணையத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முனைப்பில் இன்னும் சில நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. அதில் ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் முதல் 5G நெட்வொர்க்கை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முனைப்பில் இருக்கிறது. ஒளியின் (Light) மூலம் தகவல்களைக் கடத்தும் புதிய முயற்சி மூலம் இந்தியாவிற்கு இணையச் சேவையைக் கொண்டு வர, மிட்டலின் ஏர்டெல் மற்றும் அம்பானியின் ஜியோவுடனான பேச்சுவார்த்தையில் இருக்கிறது கூகுள் நிறுவனம்.
How to make a hundred crores in a year, I scratch before I can put a book !!!
High speed internet in India? Elon Musk, Google and Airtel on the competition field?
Elon Musk’s Starling has decided to offer high speed internet service up to 1 GBPS through this project. Elon Musk’s satellite Internet service project Starling will be available in India in 2022, according to its page.
The page states that this service is only available to specific users and that first come first served. What, the price is a little high. Make a reservation by paying $ 99 as a deposit. Approximately 7000 rupees in Indian Rupees.
The company has decided to offer high speed internet service up to 1 GB per second through this project. The project, which is currently being tested, will be rolled out to Australia, Mexico, New Zealand, the United States and Canada by the end of 2021 or later. Indian users can make a reservation by visiting its official website.
Some more companies are interested in bringing high speed internet to India. Airtel is in the process of launching the first 5G network in India. Google is in talks with Airtel of Mittal and Geo of Ambani to bring Internet service to India through a new initiative to transmit information through Light.