9,10,11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கி, நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் தனபால் வாசித்தார். இதன்பின் இடைகால நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, 9,10,11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
9,10,11-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை விதி எண் 110-இன் கீழ் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுதேர்வு இன்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
9,10,11th class students all pass – Chief Minister Edappadi announcement in the legislature !!!
Chief Minister Edappadi Palanisamy has announced in the Tamil Nadu Legislative Assembly that 9th, 10th and 11th class students are all pass. The session of the Tamil Nadu Legislative Assembly resumed today at the Chennai Kalaivanar Arena.
Speaker Danapal read out the condolence resolution in the Tamil Nadu Legislative Assembly. This is followed by a discussion on the Interim Financial Statement. Meanwhile, Chief Minister Palanisamy has announced that 9th, 10th and 11th class students will pass without a general examination.
Chief Minister Palanisamy has announced in the Tamil Nadu Legislative Assembly under Rule 110 that all 9th, 10th and 11th class students have passed. It is noteworthy that last year the Chief Minister had announced that 10th class students would pass without a general examination.