ஆஸ்திரியாவில் செல்லப் பிராணியாக வழர்க்கப்படும் பூனை ஒன்று கின்னஸ் சாதனை படைத்து பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரியா நாட்டில் அனிக்கா மொரிட்ஸ் (20) என்பவருக்குச் சொந்தமான அலெக்ஸிஸ் என்ற பெண் பூனை ஒரு நிமிடத்தில் அதிக தந்திரங்களை (Tricks) நிகழ்த்தி கின்னஸ் சாதனையை முறியடித்தது . அனிகாவின் தெளிவான வழிமுறைகளைப் பின்பற்றி, அலெக்ஸிஸ் நம்பமுடியாத 26 தந்திரங்களை அது செய்துள்ளது.
அலெக்ஸிஸ் 12 வார குட்டியாக இருந்த போதிலிருந்து அதற்கு அனிகா பயிற்சியளித்துவருகிறார். இப்போது அலெக்ஸிஸ்-க்கு 8 வயது ஆகிறது. ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் 26 கட்டளைகளுக்கு அலெக்ஸிஸ் அதற்குரிய செயல்களை நிகழ்த்திக்காட்டியுள்ளது. இந்த கின்னஸ் சாதனை வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது பெரும் வைரலாகிவருகிறது.
Guinness World Record for Wonder Cat!!!
The Guinness Book of World Records for the most domesticated cat in Austria.
Alexis, a female cat owned by Anika Moritz (20) in Austria, broke the Guinness World Record for performing more tricks in a minute. Following Anika’s clear instructions, Alexis did 26 incredible tricks.
Anika has been coaching Alexis since she was 12 weeks old. Alexis is now 8 years old. Alexis has executed 26 commands in German and English. This Guinness World Record video is currently going viral on social media.