ஒருவரின் வெற்றி என்பது அதை கனவாக காண்பவர்களுக்கும் அதற்காக முயற்சி மேற்கொள்பவர்களுக்கும் சாத்தியப்படும் ஒன்று என நிரூபித்தவர்களில் ஒருவர் கூகிள் நிறுவனத்தின் தற்போதைய தலைவரான தமிழர் சுந்தர் பிச்சை. மிக சமீபத்தில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான சச்சினுடன் சுந்தர் பிச்சை எடுத்துக் கொண்ட புகைப்படம் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்த நிலையில்,
அதில் பெரும்பாலானவர்கள் முன்வைத்த கேள்வி, சுந்தர் பிச்சையின் எளிமையை பற்றியே ஆகும். பல கோடிகள் ஊதியமாக பெறும் ஒருவரா இது என உலக மக்களால் பேசப்பட்ட சுந்தர் பிச்சையின் வெற்றிகளின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரின் மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்து, தற்போது உலகின் தலைசிறந்த நிறுவனமான கூகிளின் தலைமை பொறுப்பில் இருக்கும் தமிழர் சுந்தர் பிச்சையின் அழகிய காதல் கதையின் கதாநாயகி தான் அவரது மனைவி அஞ்சலி. காரக்பூர் ஐ.ஐ.டி.யில் ஒன்றாக பயின்ற காலம் முதல் தொடங்கிய இவர்களது காதலானது, திருமணம் முடிந்தும் இன்னமும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
ஐ.ஐ.டியில் பெண்களுக்கான விடுதியில் சென்று அஞ்சலியிடம் தமது காதலை வெளிப்படுத்த சுந்தர் பிச்சை மிக பயப்பட்டதாகவும், இந்த விவகாரத்தை தமது நண்பர்கள் இப்போதும் கூறி கிண்டலடிப்பதாகவும் சுந்தர் பிச்சை வெளிப்படுத்தியுள்ளார். மொபைல்போன்கள் இல்லாத அந்த காலகட்டத்தில் தங்கள் காதலை காத்துக்கொள்ள இருவரும் பெரும் பாடுபட்டுள்ளனர்.
பின்னர் 1995-ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொறியியல் மற்றும் எம்.எஸ் பயில சுந்தர் சென்றபோது அஞ்சலி இந்தியாவில் இருந்துள்ளார். இந்த காலகட்டத்தில் தமது காதலியின் குரல் கேட்க மாதக்கணக்கில் சுந்தர் பிச்சை காத்திருந்துள்ளார். அங்கிருந்து இந்தியாவில் இருக்கும் காதலிக்கு தொலைபேசியில் அழைக்க அவரிடம் பணம் இல்லை என்பதை அவரே தமது வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருந்தார்.
அஞ்சலியும் தமது காதலன் சுந்தரிடம் இருந்து, ஒரு தொலைபேசி அழைப்புக்காக பல மாதங்கள் வரை காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். சுந்தரின் மனைவி அஞ்சலி பிச்சை தற்போது ஆண்டுக்கு $103,166 ஊதியமாக பெற்று வருகிறார். சுந்தர் பிச்சையின் ஆண்டு வருமானம் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்.
உலகின் பல முக்கிய நிறுவனங்களில் இருந்தும் சுந்தர் பிச்சைக்கு இதைவிட பல மடங்கு ஊதியத்துடன் வாய்ப்புகள் வந்து கொண்டு இருந்தாலும், தான் தற்போது பணியற்றுகிற கூகிள் நிறுவனத்தில் தொடர்வதே தன் காதல் மனைவி அஞ்சலியின் விருப்பம் என சுந்தர் பிச்சை வெளிப்படுத்தியுள்ளார்.
Afraid to tell his love, no money to call his girlfriend on the phone – the love of the Tamils who google !!!
One of those who has proven that success is possible for those who dream of it and strive for it is Tamil Sundar Pichai, the current head of Google. The most recent photo of Sundar Pichai with one of the legends of the cricket world, Sachin, caught the attention of many.
The question posed by most of them is about the simplicity of Sundar Pichai. There is a woman behind the success of Sundar Pichai who is talked about by the people of the world as someone who is paid many crores.
Born into a very simple family in Chennai, the capital of Tamil Nadu, his wife Anjali is the heroine of the beautiful love story of Tamil Sundar Pichai, who is currently in charge of Google, the world’s premier company. Their love affair started from the time they studied together at IIT Karachi and is still going on after the marriage.
Sunder Pichcha has revealed that he was too scared to go to a hostel for women at IIT and express his love to Anjali and that his friends are still teasing him about this affair. The two have worked hard to maintain their love in those days when there were no mobile phones.
Anjali was then in India in 1995 when Sundar went on to study engineering and MS at Stanford University. Sundar has been begging for months to hear his girlfriend’s voice during this period. From there he had revealed in his own words that he had no money to call his girlfriend in India.
Anjali also said that she had been waiting for months for a phone call from her boyfriend Sundar. Sundar’s wife Anjali Pichai is currently earning $ 103,166 a year. Sundar Pichai has an annual income of about US $ 200 million.
Although Sundar Pichai has received many times more salary opportunities from various major companies around the world, Sundar Pichai has revealed that he wants his loving wife Anjali to continue with the company he currently employs.