தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் தாங்கள் வாங்கிய ரூ. 12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிக அண்மையில் அறிவித்தார். முதல்வரின் அந்த அறிவிப்பின் மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறக்கூடும். அதன்படி விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.
இந்த அறிவிப்பை வறட்சி, பருவம் தவறிய மழை, வெள்ளப்பெருக்கு போன்ற பல்வேறு இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு இருந்த விவசாயிகள் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் பயிர் கடன்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி “விவசாயிகளால் பெறப்பட்டு, ஜனவரி 31-ம் தேதி வரை நிலுவையில் உள்ள பயிர்க்கடன், வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.
மேலும் சிட்டா, பட்டாவுடன் குறிப்பிட்ட நிலத்தில் பயிர் செய்ய நகையீட்டின் பெயரில் பெறப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. வேளாண்மை சாராத இனங்களுக்கு வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படாது. பயிர் கடன்களுக்கான மானியம் பெற்றிருந்தால் எஞ்சிய தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்.
குற்ற நடவடிக்கை, நிதி முறைகேடுகளுக்கு உள்ளானவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படாது. ஒவ்வொரு விவசாயிக்கும் கடன் தள்ளுபடி சான்றிதழ், நிலுவையின்மை சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள், புதிய கடன் பெற தகுதியுடையவர்கள்” என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Crop loan is not discounted for anyone – the most important announcement issued by the Government of Tamil Nadu !!!
In the co-operative banks in Tamil Nadu, farmers have to pay Rs. Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy recently announced a debt waiver of Rs 12,110 crore. About 16.43 lakh farmers are likely to benefit from the Chief Minister’s announcement. Accordingly, the Government of Tamil Nadu has issued an order to waive agricultural crop loans.
The announcement was welcomed by farmers affected by various natural calamities such as drought, unseasonal rains and floods. In this context, the Government of Tamil Nadu has issued guidelines for crop loans. Accordingly, the crop loan, interest and penalty interest received by the farmers and outstanding till January 31 are waived.
Also the loan obtained in the name of the jeweler to cultivate the particular land with the cita, patta is waived. Jewelry loans granted to non-agricultural species will not be waived. Only the remaining amount will be waived if the subsidy for crop loans is received.
Debt will not be waived for those involved in criminal activity and financial irregularities. Every farmer should be given a loan waiver certificate and a non-payment certificate. Farmers who have received loan waivers are eligible for new loans.