சீன லோன் ஆப் நிறுவன உரிமையாளரை கைது செய்யும் நடவடிக்கையில் இந்திய மத்திய அரசு தீவிரமாக களம் இறங்கியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் ஆன்லைன் மூலமாக கடன் வழங்கும் ஆப் நிறுவனங்களை நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சீனாவை சேர்ந்த ஜியா யமாவ்(38), யுவான் லூன்(28) மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த பிரமோதா மற்றும் பவான் ஆகியோர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு சென்ற 2-ஆம் தேதி சென்னை அழைத்து வரப்பட்டனர். மேலும், சீன நிறுவனங்களுக்கு சிம் கார்டு விநியோகம் செய்த 4-பேர் உள்ப்பட இதுவரை இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆன்லைன் கடன் ஆப் விவகாரத்தில் 2-சீனர்கள் கைது செய்யப்பட்டாலும், இந்த நிறுவனத்தின் உரிமையாளர் “ஹாங்” என்ற சீன நாட்டவர்தான். இவர் சிங்கப்பூரில் இருந்துகொண்டே இந்த நிறுவனங்களை இந்தியாவில் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. ஹாங் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெங்களூருவில் 2-சீனர்கள் கைது செய்யப்பட்டதும் ஹாங்,சிங்கப்பூரில் இருந்து சீனாவுக்குதப்பிச் சென்று விட்டார். அவரை கைது செய்ய அனைத்து விமான நிலையங்களுக்கும் “லுக் அவுட்” விளம்பரங்கள் அனுப்பியுள்ளனர். மேலும், ஹாங்-கை கைது செய்ய சர்வதேச காவல் அதிகாரிகளை கொண்ட “இன்டர்போல்” உதவியும் தற்போது கேட்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளில் இருப்பதால், வெளி நாடுகளுக்கு சென்று விசாரணைநடத்த வேண்டி இருந்தது.
இந்த நிலையில், சீன கடன் ஆப் நிறுவனத்தின் உரிமையாளர் ஹாங், இனி வேறு நாடுகளுக்கு சென்றால் விமான நிலையத்திலேயே கைது செய்யும் வகையில், இன்டர்போல் காவல் அதிகாரிகளின் உதவியுடன் உலகம் முழுவதும் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Indian government to arrest Chinese loan app owner !!!
The Central Government of India has stepped in to arrest the owner of the Chinese loan app.
It has been found that Chinese companies are running online lending app companies in India. Jia Yamao (38), Yuan Loon (28) and Pramodha and Bhawan from Bangalore were arrested in Bangalore and brought to Chennai on the 2nd. Also, 8 people have been arrested so far in the case, including 4 who distributed SIM cards to Chinese companies.
Although 2-Chinese were arrested in the online loan app affair, the owner of this company is a Chinese national named “Hong”. It has been revealed that he has been running these companies in India since he was in Singapore. Chennai Central Crime Branch police have registered a case against Hong.
After the arrest of 2-Chinese in Bangalore, Hong fled from Singapore to China. “Look out” ads have been sent to all airports to arrest him. In addition, “Interpol” assistance with international police officers is currently being sought to arrest Hong Kai. Since those involved in this case were in countries like Singapore and China, they had to go abroad and conduct investigations.
In this context, it is noteworthy that Hong, the owner of the Chinese credit app company, has taken steps to issue look-out notices to all airports around the world with the help of Interpol police officers so that they can no longer be arrested at the airport if they go to other countries.