நெடுங்காலமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு செய்தி குறித்துதான், ஆஸ்திரேலியா புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. அதாவது கூகுள் தேடலில் தோன்றும் செய்திகளுக்கோ அல்லது தங்களின் தளத்தில் பகிரப்படும் செய்திகளுக்கோ, அந்த செய்தி நிறுவனங்களுக்கு அவர்களின் செய்திகளை எடுக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணம் செலுத்த வேண்டும் என்பதுதான் அந்த சட்டம்.
ஆஸ்திரேலியாவில் முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டத்தின்படி ஒவ்வொரு செய்தி நிறுவனத்துடனும் கூகுள் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இது சட்டமாக்கப்பட்டால் கூகுள் தேடு பொறி சேவையை ஆஸ்திரேலியாவிலிருந்து நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை என்று கூகுளின் ஆஸ்திரேலிய பிராந்திய இயக்குநர் மெல் சில்வா தெரிவித்துள்ளார்.
மறுபக்கம் இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் அடிபணிய மாட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்டாக் மாரிசன் தெரிவித்துள்ளார். பிற நாடுகளை போலவே ஆஸ்திரேலியாவிலும் 90-லிருந்து 95 சதமானம் சந்தை பங்கை வைத்துள்ளது கூகுள் நிறுவனம். ஆனால் தேடுபொறிக்கான பிற சேவைகளும் அங்கு உண்டு. அவை மைக்ரோசாஃப்ட்டின் பிங், யாஹூ மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் டக் டக் கோ.
ஆனால் வலைதளங்கள் குறித்து ஆராயும் அலேக்ஸா, இணையத்தில் கூகுள் வலைதளம்தான் அதிகம் பயன்படுத்தப்படுவதாக கூறுகிறது. யாஹூ 11-வது இடத்திலும் பிங் 33-வது இடத்திலும் தற்போது உள்ளது. 2018ஆம் ஆண்டு வயர்டு பத்திரிகையின் எழுத்தாளர், மூன்று மாதங்களுக்கு பிங் வலைத்தள தேடு பொறி சேவையை மட்டுமே பயன்படுத்தி சோதனை செய்து பார்த்தார். அனைத்து சமயத்திலும் அது சரியாக வேலை செய்தது என்று அவர் அறிவித்தார்.
ஆனால் சில தருணங்களில் அதாவது பழைய செய்திகளை அவர் தேடும் பொது அவருக்குச் அதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர் கூகுள் தேடுதலில் பயன்படுத்திய முறை அதில் பலனளிக்கவில்லை. மேலும் கூகுள் நிறுவனம், தேடுபொறி சேவையை மட்டும் வழங்கவில்லை. அதன் தேடுபொறி, ஜிமெயில், கூகுள் மேப்ஸ் மற்றும் யூட்யூப் ஆகியவற்றுடன் ஒரு சேர இணைந்ததாக இருந்து வருகிறது.
எனவே கூகுள் தனது தேடு பொறி சேவையை நிறுத்தினால் பிற செயலிகளையும் நிறுத்துமா என்பதை இந்த காலகட்டத்தில் கூற இயலாது. இந்த செயலிகளுக்கு மாற்றாக பிற செயலிகள் இருந்தாலும், கூகுளின் செயலிகளை போல மற்ற செயலிகள் அதிக பயனர்களை கொண்டதாக இல்லை.
அமெரிக்க கண்காணிப்பாளர்களுடன் ஏற்பட்ட சச்சரவில் கூகுள் சேவைகளை இழந்த ஹுவாவே அலைப்பேசிகளை மேற்கத்திய நாடுகளில் விற்பது கடினமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் செனட்டர் ரெக்ஸ் பேட்ரிக், “இது உலகமுழுவதும் நடைபெறவுள்ளது. அப்படியென்றால் நீங்கள் ஒவ்வொரு சந்தையிலிருந்தும் வெளியேறுவீர்களா.” என கூகுள் நிறுவனத்திடம் ஒரு கேள்வி எழுப்பினார். ஆனால் கூகுள் மற்றும் பாதிக்கப்பட்ட பிற நிறுவனங்களான ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவை மையமாகக் கொண்டது. அமெரிக்காவின் முந்தைய அரசு இந்தச் சட்டம் குறித்து அவசரப்பட வேண்டாம் என ஆஸ்திரேலியாவை ஏற்கனவே எச்சரித்திருந்தது.
இதேபோன்றதொரு தருணம் இதற்கு முன்பு நடக்கவில்லை என்றாலும், உள்ளூர் சட்டத்தால் ஒரு நாட்டைவிட்டு ஏற்கனவே கூகுள் வெளியேறியுள்ளது. ஆம் சீனாவில்தான் அது நடந்தேறியது. சீனா ஹேக்கிங்கில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டுகளை கூறிய கூகுள் 2010-ஆம் ஆண்டிலிருந்து சீன பெரு நிலப்பரப்பிலிருந்து வெளியேறியது.
இதே போன்று இன்னும் ஒரு சம்பவம் ஐரோப்பாவில் அரங்கேறி கொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்ச்சைக்குரிய “காப்பிரைட்” சட்டம், தேடு பொறி சேவை மற்றும் செய்தி சேகரித்து வழங்கும் பிற தளங்கள், செய்தி ஊடகங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என அறிவித்து இருக்கிறது. பிரான்ஸில் இந்த வாரம் செய்தி ஊடகத்தினர் இது எவ்வாறு செயல்பட வேண்டும் எனக் கூகுளுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினர். ஆனால் இம்மாதிரியான ஒப்பந்தங்கள் குறைந்த அளவிலேயே ஏற்பட்டுள்ளன.
சீனாவை ஒப்பிட்டால் ஆஸ்திரேலியா ஒரு சிறிய சந்தை. 2019-ஆம் ஆண்டில் கூகுள் ஆஸ்திரேலியாவில் 3.7பில்லியன் அமெரிக்க டாலர்கள் லாபமாக ஈட்டியது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் கூகுள் பயனாளர்களை, கூகுள் சேவை வேறு நாட்டின் கூகுள் தேடலுக்கு கொண்டுசெல்ல முடியும் ஆனால் அது உள்ளூர் தேடல் முடிவுகளை காட்டாது. இருப்பினும் சேவையை பயன்படுத்த முடியும். ஆனால் ஐ.பி முகவரி காட்டும் பகுதியை வைத்து கூகுளால் ஆஸ்திரேலியாவின் பயனர்களை எளிதாக தடுக்க முடியும்.
இல்லையேல், வி.பி.என் ஆதாவது விற்சுவல் பிரைவேட் நெட்வொர்க், உங்கள் கணினி வேறு ஒரு இடத்திலிருந்து பணி செய்வதுபோல அது காட்டும். இதைதான் பெரும்பாலான கணினி தொழில்நுட்பத்தில் கைத்தேர்ந்தவர்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் அந்த சேவை மிகக் குறைவான வேகத்தில்தான் செயல்படும்.
ஆஸ்திரேலியா செய்தி ஊடகங்களுடன் கூகுள் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தவில்லை என்றால், நீதிபதி ஒருவர் அதில் தலையிட்டு எது நியாயம் என முடிவு செய்வார். ஆனால் ஆஸ்திரேலிய அரசு ஒரு “நியாயமான தொகை” செய்தி ஊடகங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என உறுதியாக கூறுகிறது. கடந்த 15 வருடங்களில் அச்சு ஊடகங்களில் லாபம் பெரிதும் குறைந்துவிட்டதாக ஆஸ்திரேலிய அரசு கூறுகிறது. அதே சமயம் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் டிஜிட்டல் விளம்பரங்கள் அதீத உயர்வை கண்டுள்ளது.
பல தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களை நிர்வகிக்கும் ஊடகத்துறையின் சக்தி வாய்ந்த நபராக கருதப்படும் ரூபெர்ட் முர்டோக்கின், நியூஸ் கார்ப் நிறுவனம் ஆஸ்திரேலியாவில்தான் உருவானது. இந்த சட்டம் வந்தால் நியூஸ் கார்ப் நிறுவனம் முக்கியமாக பலன் பெறும். மற்றும் ஆஸ்திரேலியாவின் ஏபிசி நியூஸிற்கு நல்ல பலன் கிடைக்கும். 2014-ஆம் ஆண்டிலிருந்து ஏ.பி.சி.-யின் நிதி, மில்லியன் டாலர்கள் கணக்கில் குறைந்துள்ளது. மேலும் விளம்பரங்கள் இல்லாமல் பல உள்ளூர் செய்தித்தாள்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
Google threatens Australia – threats to leave !!!
Australia has decided to bring in a new law on a news item that has been talked about for a long time. That means that the technology companies that take their news to those news organizations have to pay for the news that appears on Google search or for the news that is shared on their site.
Under the proposed law in Australia, Google would have to enter into a trade agreement with each news organization. Mel Silva, Google’s Australian regional director, said there was no other option but to suspend Google’s search engine service from Australia if it became law.
On the other hand, Australian Prime Minister Stock Morrison has said he will not bow to this threat at all. Google has a 90- to 95 percent market share in Australia, as in other countries. But there are other search engine services out there. They include Microsoft’s Bing, Yahoo and Duck Duck Go., which focuses on security.
But Alexa, who researches websites, says Google is the most used website on the Internet. Yahoo is currently ranked 11th and Bing 33rd. The author of Wired Magazine 2018 has been testing for three months using only the Bing website search engine service. He declared that it worked properly at all times.
But at some point that means the public he is looking for old news has trouble with it. The method he used in the Google search did not work. And Google is not the only search engine service. Its search engine has been integrated with Gmail, Google Maps and YouTube.
So it is not possible to say at this time whether Google will stop other processors if it stops its search engine service. While there are other processors as an alternative to these processors, other processors are not as user-friendly as Google’s processors.
It is worth noting that it was difficult to sell Huawei phones in the West, which lost Google services in a dispute with U.S. monitors. Senator Rex Patrick of Australia said, “This is going to happen all over the world. So you’ll be out of every market.” As asked a question to Google. But companies like Google and other affected companies like Facebook are centered in the United States. The previous US government had already warned Australia not to rush into the law.
Although a similar moment has never happened before, Google has already left a country by local law. Yes, it happened in China. Google has been out of mainland China since 2010, accusing China of engaging in hacking.
A similar incident is taking place in Europe. The EU’s controversial “Copyright” Act stipulates that search engine services and other news gathering sites must pay for the news media. The media in France this week struck a deal with Google on how it should work. But such deals have occurred to a lesser extent.
Australia is a small market compared to China. In 2019, Google made a profit of $ 3.7 billion in Australia. Google service in Australia can take Google users to another country Google search but it does not show local search results. However the service can be used. But Google can easily block users in Australia by keeping the IP address area.
Otherwise, the VPN, that is, the virtual private network, will show that your computer is working from somewhere else. This is what most computer technology experts use. But that service will operate at a very low speed.
If Google does not enter into an agreement with the Australian media, a judge will intervene and decide what is fair. But the Australian government is adamant that a “reasonable amount” should be paid to the media. The Australian government says profits in the print media have plummeted over the past 15 years. At the same time, digital advertising for foreign companies such as Google and Facebook has skyrocketed.
Rupert Murdoch is considered to be one of the most influential figures in the media who manages many national and international media. News Corp was formed in Australia. News Corp will mainly benefit if this law comes into force. And Australia’s ABC News will benefit. Since 2014, ABC’s funding has fallen by millions of dollars. Many local newspapers without further advertisements have also been severely affected.