
சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி – விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரானா தொற்று உறுதியானது. காய்ச்சல், நுரையீரல் தொற்று இருந்ததால் சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 27ம் தேதி விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு.

ரஜினி, சசிகலா இருவரும் மருத்துவமனைக்கு சென்றது இயல்பா என்ற சந்தேகம் எழுகிறது! – தனியரசு எம்.எல்.ஏ

சென்னையில் பெட்ரோல் விலை விட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.88.07 க்கு விற்பனை; டீசல் விலை லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.80.90 க்கு விற்பனை.

இயேசு அழைக்கிறார் என்ற மத பிரச்சார கூட்டங்களை நடத்தி வரும் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் 3-வது நாளாக ஐ.டி சோதனை. கர்நாடகா: சக்திவாய்ந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழப்பு.

கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிபொருட்கள் வெடித்ததில் 8 பேர் உயிரிழந்தனர். டைனமைட் என்ற வெடிபொருளை ஏற்றி சென்ற வாகனம் வெடித்து சிதறி உள்ளது. நேற்று இரவு நிகழ்ந்த இந்த வெடி விபத்தால் 15 முதல் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில அதிர்வு உணரப்பட்டது.