இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று அதிகாலை ஏற்பட்ட ஒரு மிகசக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 34 பேர் உயிரிழந்தனர். பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதிகாலை நேரத்தில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர், இது அந்த தீவில் இருந்த மக்களிடையே பீதியை தூண்டியது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு பெரும் நிலநடுக்கம் மற்றும் கடல் சுனாமியால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் இறந்தனர்.
மாமுஜு நகரில் மட்டும் 26 பேர் இறந்துவிட்டதாகவும், பலர் கட்ட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேற்கு சுலவேசி மாகாணத்தில் 110,000 பேர் வசிக்கும் நகரமான மாமுஜுக்கு தெற்கே ஒரு பகுதியில் குறைந்தது எட்டு பேர் இறந்துவிட்டதாக தேசிய பேரிடர் நிறுவனம் அறிவித்துள்ளது, எனவே மொத்த இறப்பு எண்ணிக்கை தற்போது 34 ஆக உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தில் மாமுஜு மருத்துவமனை முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளுக்கு அடியில் நூற்றுக்கணக்கான நோயாளிகளை பேரிடர் மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
அதிகாலை 2:18 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர், ஒரு மிகப்பெரும் ஹோட்டல் மண்ணுக்குள் புதைந்ததாக, நாட்டின் தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் அறிவித்துள்ளது, அதே நேரத்தில் பிராந்திய ஆளுநர் அலுவலகமும் பலத்த சேதமடைந்தது. இதனிடையே இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
சென்ற 2018 ஆம் ஆண்டில், சுலவேசியில் பாலுவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 4,300 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். டிசம்பர் 26, 2004 அன்று, சுமத்ரா கடற்கரையில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது இதனால் மிகப்பெரிய சுனாமியை ஏற்பட்டது, இந்தோனேசியாவில் சுமார் 170,000 பேர் உட்பட இப்பகுதி முழுவதும் 220,000 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.