தமிழ் சினிமாவில் யாரும் அசைக்க முடியாத நாயகனாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இ்ந்த படத்தினை அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக விவசாயி, நவரச, மாமனிதன், லாபம் போன்ற பல படங்களை கைவசம் ஆக வைத்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி அவ்வப்போது ஏதாவது ஒரு அப்டேடை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறார் .
மாஸ்டர் படத்தில் பிறகு அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் துக்ளக் தர்பார். இப்படத்தை அறிமுக இயக்குனரான டெல்லிபிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ராசி கண்ணா, மஞ்சிமா மோகன், பார்த்திபன், கருணாகரன் போன்ற ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பிக்பாஸில் பங்கேற்ற சம்யுக்தா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
