
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில், நல்லபாம்பு ஒன்று தான் விழுங்கிய 6 கோழி முட்டைகளை உடையாமல் திருப்பி வாந்தி எடுத்ததைக்கண்டு மக்கள் ஆச்சரியமடைந்தனர்.
கடலூர் அருகே கம்மியம்பேட்டையே சேர்ந்த ஒருவர் தனது வீட்டின் மேல் தளத்தில் வைக்கோல் போட்டு வைத்திருந்துள்ளார். அவரின் வீட்டில் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்படும் கோழி ஒன்று இந்த வைக்கோல் போரில் முட்டையிட்டு அடைகாத்து வந்தது. திடீரென்று வைக்கபோரிலிருந்த கோழி மரண ஓலத்துடன் கத்திக் கொண்டிருந்தது.

அந்த சத்தத்தைக்கேட்டு மேல்தளத்திற்கு சென்று உரிமையாளர் அங்கு பார்த்த போது, கோழி துடி துடித்துக் கொண்டிருந்தது. வீட்டின் உரிமையாளர் கோழியின் நிலையை கண்டு பேர் அதிர்ச்சியடைந்தார். வைக்கோல் இருந்த பகுதியை பார்த்த போது, உள்ளே பாம்பு ஒன்று இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக, பாம்பாட்டியை வரவழைத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அந்த பாம்பாட்டி நல்லபாம்பை சாதூர்யமாக செயல்பட்டு அந்த பாம்பை பிடித்தார். சுமார் 6 அடி நீளம் கொண்ட அந்த நல்ல பாம்பு கோழி முட்டைகளை முழுங்கி விட்டு ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தது தெரிய வந்தது. அந்த பாம்பை பிடித்த போது, தன் வயிற்றிலிருந்த 6 கோழி முட்டைகளையும் அப்படியே உடையாமல் வெளியே வாந்தி எடுத்து வெளி தள்ளியது. இந்த சம்பவத்தை அங்கு நேரில் பார்த்த மக்கள் ஆச்சரியதில் உறைந்து போனார்கள். அதன்பின்னர், அந்த பாம்பை கொண்டுபோய் அருகிலிருந்த காட்டில் விட்டனர்.
