
இந்தியாவின் டெல்லியை சார்ந்தவர் சூரஜ் மல்ஹோத்ரா. இவரது நண்பர் ராகுல். இவர்கள் இருவரும் வடமாநிலத்தை சேர்ந்த பெண்களிடம், திரைத்துறையில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக தெரிவித்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாத்தித்து வந்துள்ளனர்.

மும்பை மற்றும் டெல்லி பகுதியை சேர்ந்த, ஏழ்மையான சூழலில் மாடலிங் பணி செய்து வந்த பெண்களை ஏமாற்றி ஆந்திரா, சென்னை, பெங்களூர் போன்ற பகுதிகளுக்கு அழைத்து வந்து, சினிமா புள்ளிகளிடம் வாய்ப்பு பெற்று தருவதாக அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் நட்சத்திர விடுதிக்கு இரண்டு பெண்களை அழைத்து வந்தவர்கள், திரைத்துறை பிரமுகர்களுக்கு மாமாவாக செயல்பட்டுள்ளனர். இந்த செய்தி தொடர்பாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில், காவல் துறையினர் அந்த நட்சத்திர விடுதியை சோதனை செய்துள்ளனர்.

அதன்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த இரண்டு இளம் மாடலிங் பெண்களை காவல் துறையினர் மீட்டுள்ள நிலையில், திருமுல்லைவாயல் பகுதியை சார்ந்த செந்தில் மற்றும் சரவணன் ஆகியோரையும் கைது செய்துள்ளனர். தப்பியோடிய சூரஜ் மற்றும் ராகுலை காவல் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
