மிகப் பழமையான ஒலிம்பிக் சாம்பியையான ஹங்கேரி வீராங்கனை ஆக்னஸ் கெலெட்டி சென்ற சனிக்கிழமை தனது 100 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
ஆக்னஸ் கெலெட்டி ஹங்கேரியின் மிக வெற்றிகரமான ஒலிம்பிக் வீராங்கனைகளில் ஒருவர் ஆவார். ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் ஹங்கேரிக்காக 5 தங்கப் பதக்கங்கள், மூன்று வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் இரு வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்களாக மொத்தம் 10 பதக்கங்களை அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹங்கேரியின் மிக வெற்றிகரமான ஜிம்னாஸ்ட்டும், வரலாற்றில் மிகவும் அலங்கரிக்கப்பட்ட யூத விளையாட்டு வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார். கெலெட்டி இஸ்ரேலிய குடியுரிமை பெற்ற ஏனைய யூதர்களையும் விட அதிக ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற்றுள்ளார். 1957 ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த அவர், தற்போது அங்கு வசித்து வருகிறார்.
கெலெட்டி 1921-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ஆம் தேதி ஹங்கேரியின் புடாபெஸ்டில் பிறந்தார். நான்கு வயதில் ஜிம்னாஸ்டிக்ஸைத் தொடங்கிய அவர் 16 வயதில் ஜிம்னாஸ்டிக்ஸில் ஹங்கேரிய தேசிய சம்பியன் ஆனார். 1937 லிருந்து 1956 ஆம் ஆண்டுகளுக்கிடையில் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று 10 பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.